MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விலகிய AR ரகுமான்; ‘சூர்யா 45’ இசையமைப்பாளராக கமிட்டான டிரெண்டிங் பாய்

விலகிய AR ரகுமான்; ‘சூர்யா 45’ இசையமைப்பாளராக கமிட்டான டிரெண்டிங் பாய்

Suriya 45 Music Director Changed : ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதால் அவருக்கு பதில் இளம் இசையமைப்பாளர் கமிட்டாகி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 09 2024, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suriya

Suriya

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து வீட்ல விசேஷம் படத்தை இயக்கி வெற்றிகண்ட அவர், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
suriya 45 Movie Team

suriya 45 Movie Team

சூர்யா 45 படக்குழு

சூர்யா 45 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜை போடப்பட்டு அங்கிருந்து படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்னர் விஜய்யின் மெர்சல், பிகில், ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். இப்படத்திற்கு முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார்.

இதையும் படியுங்கள்... சூர்யா 45 படத்தில் இருந்து திடீரென விலகிய ஏ.ஆர்.ரகுமான் - காரணம் என்ன?

35
AR Rahman Left Suriya 45

AR Rahman Left Suriya 45

ஏ.ஆர்.ரகுமான் விலகல்

சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது திடீரென அப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் எதற்காக விலகினார் என்கிற அப்டேட்டை படக்குழு வெளியிடவில்லை. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் ஒரு வருடம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அவர் சூர்யா 45 படத்தில் இருந்து அவர் விலகி இருப்பதால், ஒருவேளை அதுகூட காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

45
Sai Abhyankkar

Sai Abhyankkar

சூர்யா 45 படத்தின் புது இசையமைப்பாளர் யார்?

ஏ.ஆர்.ரகுமான் விலகியதால் அவருக்கு பதில் யார் இசையமைப்பாளர் ஆகப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி கட்சி சேரா, ஆசை கூட போன்ற சுயாதீன பாடல்களுக்கு இசையமைத்து தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர் தான் சூர்யா 45 படத்துக்கு இசையமைக்க உள்ளாராம்.

55
sai abhyankkar Father Tippu and Mother Harini

sai abhyankkar Father Tippu and Mother Harini

யார் இந்த சாய் அபயங்கர்?

இந்த சாய் அபயங்கர் வேறுயாருமில்லை... பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஜோடியின் மகன் தான் இவர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் சாய் அபயங்கர் தன் இரண்டாவது படத்திலேயே சூர்யா போன்ற மாஸ் ஹீரோவுக்கு இசையமைக்க கமிட்டாகி உள்ளதால், அனிருத் போல் அடுத்த சென்சேஷனல் இசையமைப்பாளராக அவர் உருவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்... திருவண்ணாமலையில் நிலச்சரிவா? எப்போ? அதிர்ச்சியான ரஜினிகாந்த்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்
சாய் அபயங்கர்
சூர்யா 45

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved