ரீ-ரிலீஸில் கெத்து காட்டினாரா ரஜினி..! பாபா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
புதுப்படங்களுக்கு இணையாக 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிகளும் திரையிடப்பட்டன.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் பாபா. கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தை ரஜினிகாந்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதும் ரஜினி தான். அதனால் இப்படம் தனது மனதுக்கு நெருக்கமானது என பல்வேறு பேட்டிகளில் ரஜினியே கூறி இருக்கிறார்.
ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் அதற்கு முன் வெளியான அண்ணாமலை, பாட்ஷா ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், பாபா படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசானது. ஆனால் இப்படம் ரிலீசான சமயத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரஜினியின் கெரியரில் தோல்வி படமாக அமைந்தது பாபா.
இதையும் படியுங்கள்... 'பாபா' ரீ- ரிலீஸ் படத்தின் புதிய கிளைமேக்ஸ் காட்சி நடந்த மாற்றம்... என்ன தெரியுமா?
ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் வெளியான படங்கள் சில தியேட்டர்களில் மட்டும் ரீ-ரிலீஸ் ஆவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் தனது மனதுக்கு நெருக்கமான பாபா திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்ட ரஜினிகாந்த். அப்படத்தை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி, அதில் சில காட்சிகளை மாற்றியமைத்து பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்ய திட்டமிட்டார்.
அதன்படி புதுப்படங்களுக்கு இணையாக 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிகளும் திரையிடப்பட்டன. ரிலீசுக்கு முன் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டதால் இப்படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் நாளில் இப்படம் தமிழகத்தில் ரூ.80 லட்சமும், கர்நாடகாவில் ரூ.7.5 லட்சமும், மற்ற மாநிலங்களில் ரூ.5 லட்சமும், வெளிநாடுகளில் ரூ.50 லட்சம் என மொத்தமாக முதல் நாளில் ரூ.1.4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். புதுப்படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸ் படத்துக்கு வசூல் கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்... உற்சாகம் பொங்க யூடியூப் பிரபலம் வெளியிட்ட போட்டோ வைரல்