முதல்ல ஞானவேல்.. அப்புறம் லோகேஷ் - மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் - Vacation முடிந்ததும் இது தான் பிளான்!
ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது அவருடைய ரசிகர்கள்கள் குஷிப்படுத்தியுள்ளது.
சுமார் 48 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 72 வயதை தொட்டபொழுதும் இன்றளவும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் அளவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல பல வசூல் சாதனைகளையும் தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறார் ரஜினிகாந்த்.
இறுதியாக கடந்த 2021ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு அவருடைய நடிப்பில் படங்கள் வெளியாகாத நிலையில், தற்பொழுது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது அவருடைய ரசிகர்கள்கள் குஷிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி ஏற்கனவே ஜெயிலர் பட பணிகளையும், தனது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் திரைப்பட பணிகளையும் முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு தனது ஓய்வு காலத்தை முடித்து திரும்பி வந்ததும் இந்த வருடத்திலேயே ஞானவேல் படத்தில் நடித்து முடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
அடுத்தபடியாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய திரைப்படத்தில் எதிர்வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் படபிடிப்பில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளது. இது அவருடைய 171வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு படங்களில் நடிப்பதிலிருந்து அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
4 நாட்களில் ரூ.50 கோடி வசூல்... அடுத்த டார்கெட் ரூ.100 கோடி! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாவீரன்