குஷ்பூ மட்டும் என் லைஃப்ல வரலேனா; அந்த நடிகையை லவ் பண்ணிருப்பேன் - சுந்தர் சி ஓபன் டாக்
நடிகை குஷ்பூவின் கணவரும், இயக்குனருமான சுந்தர் சி, தனக்கு பிரபல நடிகை ஒருவர் மீது கிரஷ் இருந்தது பற்றி பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.
Khushbu and Sundar C
காமெடி படங்களை எடுப்பதில் கில்லாடி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு, அரண்மனை என பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இவர் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 மற்றும் காஃபி வித் காதல் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடந்த ஆண்டு அரண்மனை 4 படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் சுந்தர் சி.
Director Sundar C
அரண்மனை 4 படத்துக்கு பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருடன் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை சுந்தர் சி-யின் மனைவி குஷ்பூ தான் தயாரித்து உள்ளார். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இதுதவிர சுந்தர் சி கைவசம் மற்றுமொரு படம் உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிப்பு.. பட தயாரிப்பு.. அரசியல்.. ஆல் டைம் செம பிஸி - எம்மாடியோ என யோசிக்க வைக்கும் குஷ்பூவின் Net Worth!
Sundar C Favourite Actress
அதுதான் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தின் முதல் பாகம் நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர் சி கமிட்டாகி உள்ளார். இதிலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மேலும் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவும் சுந்தர் சி திட்டமிட்டு இருக்கிறார்.
Soundarya
இந்த நிலையில், இயக்குனர் சுந்தர் சி தனக்கு ஒரு நடிகை மீது கிரஷ் இருந்தது பற்றி ஓப்பனாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “நான் ஒர்க் பண்ணாதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின் என்றால் அது செளந்தர்யா தான். ஒருவேளை குஷ்பூவை நான் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பா செளந்தர்யாவுக்கு புரபோஸ் பண்ணிருப்பேன். அவங்க ரொம்ப நல்ல கேரக்டர். இப்படியொரு நல்ல பெண்ணை பார்ப்பது மிகவும் அரிது. அவருடைய அண்ணன் அபர் அவங்கள விட்டு ஒரு செகண்ட் கூட நகரமாட்டார். அதனால தான் சாகும்போது கூட 2 பேரும் ஒன்னா செத்துபோயிட்டாங்க. அவரது இறப்பு ரொம்ப துரதிர்ஷ்டமான விஷயம்” என சுந்தர் சி கூறினார்.
இதையும் படியுங்கள்... லெஜண்ட் சரவணனுடன் இயக்குனர் சுந்தர் சி திடீர் சந்திப்பு...! பின்னணி என்ன?