நடிப்பு.. பட தயாரிப்பு.. அரசியல்.. ஆல் டைம் செம பிஸி - எம்மாடியோ என யோசிக்க வைக்கும் குஷ்பூவின் Net Worth!
Actress Khushboo Net Worth : தமிழ் திரையுலகம் என்பதை தாண்டி உலக சினிமா வரலாற்றிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு மட்டும் தான். அந்த அளவிற்கு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் அவர்.
Kushboo Old pics
நடிகை குஷ்பூ ஆரம்ப காலத்தில் தெலுங்கு சினிமாவில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் முன்னணி நாயகியாக மாற துவங்கினார். குறிப்பாக 1988ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வெளியான தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன், நடிகன் போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்தது.
Kushboo in Politics
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சத்யராஜ், கார்த்தி மற்றும் பிரபு என்று 80களின் இறுதியில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டு இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஜோடியாக நடித்திருக்கிறார் குஷ்பூ. திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த காலத்திலேயே கடந்த 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, அரசியல் ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட துவங்கினார் குஷ்பு.
Kushboo Sundar C
அதன் பிறகு காங்கிரஸ், பாஜக என்று பல கட்சிகளில் மாறி பயணித்து வருகின்றார், பல நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. கடந்த 2000வது ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்ட குஷ்புவிற்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
வெள்ளி திரை நாயகி, சின்னத்திரையில் தொகுப்பாளினி, அரசியல்வாதி என்று பல வேலைகளை செய்து வரும் குஷ்பூ, தனது கணவர் சுந்தர் சி அவர்களுடன் இணைந்து பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். ஒரு சில சொகுசு கார்களும் பல சொகுசு வீடுகளையும் கொண்டுள்ள குஷ்புவின் சொத்து மதிப்பு சுமார் 98 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.