லெஜண்ட் சரவணனுடன் இயக்குனர் சுந்தர் சி திடீர் சந்திப்பு...! பின்னணி என்ன?
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி, லெஜண்ட் சரவணனை சந்தித்தது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமா பக்கம் தனது முழு கவனத்தை திருப்பி உள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமான தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தை விசில் பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் லெஜண்ட் சரவணனே தயாரித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். பிரபு, விவேக், யோகிபாபு, விஜயகுமார், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... பர்த்டே பிளானை டோட்டலாக மாற்றிய நயன்! இத்தனை வருட பழக்கத்தை குழந்தைகளுக்காக கை விட்ட லேடி சூப்பர் ஸ்டார்!
இவ்வாறு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்காரணமாக இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் முடிவையும் கைவிட்டு விட்டார் அண்ணாச்சி. இதையடுத்து அவர் தான் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சி, லெஜண்ட் சரவணனை சந்தித்தது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் சந்திப்பின் பின்னணியில் படம் இயக்குவது குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும் வேறு சில காரணங்களுக்காக அவரை சுந்தர் சி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்தில் இணைந்த உதயநிதி... மாஸான போஸ்டருடன் வந்த முக்கிய அப்டேட்