Sundar C : பிரபல நிகழ்ச்சியின் பெயரை படத்துக்கு தலைப்பாக வைத்த சுந்தர் சி... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Sundar C : ஆக்ஷன் மற்றும் பேய் படங்கள் செட் ஆகாததால் தற்போது மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பி உள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது நகைச்சுவை திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
காமெடிப் படங்கள் எடுப்பதில் கில்லாடி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கலகலப்பு, கிரி, அரண்மனை ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இவர் சமீபகாலமாக இயக்கிய விஷாலின் ஆக்ஷன், ஆர்யா நடித்த அரண்மனை 3 போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
ஆக்ஷன் மற்றும் பேய் படங்கள் செட் ஆகாததால் தற்போது மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பி உள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது நகைச்சுவை திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக மாளவிகா மேனன், ரைசா வில்சன், அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மேலும் தொகுப்பாளினி டிடி, பிக்பாஸ் சம்யுக்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். சுந்தர் சியும், யுவனும் கடைசியாக வின்னர் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘காஃபி வித் காதல்’ என பெயரிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் டிடி நடித்துள்ளதால் அவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் பெயரை சற்று மாற்றி படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விக்ரமில் விஜய் சேதுபதியின் ‘சந்தனம்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா... வெளியான ஷாக்கிங் தகவல்