MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மோதலில் ஆரம்பித்த காதல்; சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் உருவான புதிய லவ் ஜோடி?

மோதலில் ஆரம்பித்த காதல்; சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் உருவான புதிய லவ் ஜோடி?

சன் டிவியில்  சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டு, அணைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும், சீரியலில் நடித்து வரும் ஹீரோ - ஹீரோயின்ஸ்  தற்போது நிஜமாகவே காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 29 2024, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Moondru Mudichu Serial

Moondru Mudichu Serial

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'மூன்று முடிச்சு '. இந்த சீரியலில் ஹீரோவாக நியாஸ் கான் நடிக்க, ஹீரோயினாக ஸ்வாதி கொண்டே நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன், தர்ஷனா ஸ்ரீபால், மீனா வேம்புரி, கீர்த்திகா லட்டு, கீதா ரவிசங்கர், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

26
Moondru Mudichu Serial update

Moondru Mudichu Serial update

இந்த சீரியல் துவங்கிய சில வாரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP ரேட்டிங்கில், டாப் 3 பட்டிலுக்குள் இடம்பிடித்தது. தற்போது இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் நியாஸ் கான் மற்றும் ஸ்வாதி கொண்டே தான் உண்மையிலேயே காதலித்து வருவதாக, சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

இயக்குனருடன் மலர்ந்த காதல்! லவ்வரை அறிமுகப்படுத்திய லவ் டுடே பட நடிகை!!

36
Moondru Mudichu Serial love Couple

Moondru Mudichu Serial love Couple

இந்த சீரியல் துவங்கியதில் இருந்தே, இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடித்ததாகவும், பின்னர் அதுவே காதல் வர காரணமாக மாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல் வதந்தியா? உண்மையா என்பது பற்றி இதுவரை நியாஸ் மற்றும் ஸ்வாதி கொண்டே தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

46
Eeramana Rojave 2 serial Fame Swathi Konde

Eeramana Rojave 2 serial Fame Swathi Konde

'மூன்று முடிச்சு' தொடரில் நடித்து வரும், 'ஸ்வாதி கொண்டே' விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே 2' தொடரில், திரவியத்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' படத்தில், அரவிந்த் சாமிக்கு தங்கையாக நடித்திருந்தார். அதே போல், கார்த்தியின் முறை பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நயன்தாராவுக்கு 40 வயசுனு சொன்னா யார் நம்புவா? 20 வயது யங் லுக்கில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!

56
Niyaz Khan

Niyaz Khan

சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்... விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஸ்வாதி கொண்டே, தற்போது 'மூன்று முடிச்சு' தொடரில் தனித்துவமான கதாநாயகி ரோலில் நடித்து வருகிறார். கிராமத்து பெண்ணான நாந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வாதியை, தன்னுடைய அம்மாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக, EX மினிஸ்டர் பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்ட போதும், நந்தினி கழுத்தில் தாலி கட்டி அவரையே தன் மனைவியாக மாற்றுகிறார். முழு நேர குடிகாரனாக இருக்கும் சூர்யா (நியாஸ்)-சை எப்படி நந்தினி திருத்த போகிறார். என்பதே இந்த தொடரின் கதைக்களம் என தெரிகிறது.

66
Puthuputhu Arthangal Serial Hero Niyaz Khan

Puthuputhu Arthangal Serial Hero Niyaz Khan

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடித்து வரும் நியாஸ், இதற்க்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலில், தேவயானியின் மகனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியாஸ் - ஸ்வாதி கொண்டே காதலிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved