வடிவேலு காமெடி தான்டா நல்லாருக்கு... அவன நடிக்க சொல்லுடா! பிரபலம் மூலம் வைகைபுயலுக்கு தூது அனுப்பிய விஜயகாந்த்
வடிவேலு உடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகும், அவன் காமெடி தான் நல்லாயிருக்கு, அவன நடிக்க சொல்லு என விஜயகாந்த் சொன்னதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர்கள் என்றால் ஒருசிலர் தான். அதில் வடிவேலுவுக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னுடைய உடல்மொழியால் ரசிகர்களை மகிழ்வித்து, காமெடியில் தனெக்கென தனி பாணியை உருவாக்கி கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. அவர் திரையுலகில் நடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் கூட அவரது காமெடிகள் தான் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி தினசரி ஒவ்வொருவரையும் மகிழ்வித்து வந்தது.
அப்படிப்பட்ட காமெடி ஜாம்பவானுக்குள்ளேயும் ஒரு நடிப்பு திறமை ஒளிந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் சீரியஸ் ஆன வேடம் ஏற்று நடித்திருந்த வடிவேலுவை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். வடிவேலுவை இப்படி பார்த்ததே இல்லையே எனவும், இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இப்படி வடிவேலுவை பாராட்டி பலரும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் வடிவேலு உடன் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்த சக காமெடி நடிகர்களான கிங்காங், மீசை ராஜேந்திரன், சுப்புராஜ், போண்டா மணி, முத்துக்காளை ஆகியோர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கூட்டாக வந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது வடிவேலு குறித்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர்கள், கேப்டன் விஜயகாந்தை பாராட்டி பேசினர்.
இதையும் படியுங்கள்... நல்லா நடிச்சிருக்கனு பாராட்டுனாங்க; ஆனா வாய்ப்பு தரல! 1.5 வருஷம் சும்மா இருந்தேன்- ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
subburaj
அதில் நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் பேசுகையில், “எங்க அண்ணேன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் வடிவேலு அவரை பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். ஒருநாள் நான் விஜய் வீட்டருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கேப்டன் விஜயகாந்த்தின் கார் திடீரென என் மீது மோத வந்தது. அப்போது யார்ரா அதுனு திரும்பி பார்த்தா கேப்டன் கார்ல இருந்தாரு. அவரு டேய் இங்க வாடானு என்னைய கூப்பிட்டார்.
என்ன அண்ணேன்னு கேட்டேன். வடிவேலுவ நடிக்க சொல்றானு சொன்னாரு. ஏன் ஆள வச்சு அடிக்குறதுக்கானு கேட்டேன். அதற்கு அவர், இல்லடா அவன் காமெடி தான்டா நல்லாயிருக்கு. அவன நடிக்க சொல்லுனு சொன்னாரு. இதப்போய் நான் வடிவேலுகிட்ட சொல்லட்டுமானு கேட்டேன். போய் சொல்லுனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. உடனே வடிவேலுவிடம் சென்று கேப்டன் சொன்னதை சொன்னேன். அப்படியானு வடிவேலுவே ஆச்சர்யப்பட்டான். அதுமட்டுமின்றி வடிவேலு தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசினாலும், யாரும் அவரை தரக்குறைவாக பேச வேண்டாம் என பிரச்சார சமயத்தில் வடிவேலு அனைவரிடமும் கேட்டுக்கொண்டதாக சுப்புராஜ் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" பட தலைப்பு திடீர் என மாற்றம்!