வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" பட தலைப்பு திடீர் என மாற்றம்!

இயக்குனர் வ.கௌதமன் தற்போது இயக்கி நடித்து வரும் படத்திற்கு 'மாவீரா' என பெயரிடப்பட்ட நிலையில், திடீர் என தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

v gowthaman starring maveera movie title changed

வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

v gowthaman starring maveera movie title changed

உறவினர்கள் சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன் தந்தை! நயன் - விக்கி மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

 ஜி.வி பிரகாஷ் இசையமைக்க "கவிப்பேரரசு" வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள "ஸ்டண்ட்" சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நடனம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்புசெய்கிறார். பிரமாண்ட பொருட்செலவில்... பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

v gowthaman starring maveera movie title changed

தனுஷ் D50 படத்தின் டைட்டில் இதுவா? சும்மா தாறு மாறா இருக்கே.. சமூக வலைத்தளத்தில் லீக்கான தகவல்!

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில்  நடத்திய நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் படக்குழு துவங்க உள்ளது. இந்த படத்திற்கு முதலில் 'மாவீரா' என பெயரிடப்பட்ட நிலையில், தற்போது...  "மாவீரா படையாண்டவன்"  என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக மாஃபியா கேங்குகளோடு கௌதமன் மோதவிருக்கும் மிக முக்கிய சண்டைக் காட்சிக்காக  மாஸ்டரின் உதவியாளர் சிவாவை வைத்து  தினமும் அதிகாலை மூன்று மணி நேரம் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட மிக கடுமையான பயிற்சியினை எடுத்து வருகிறாராம் கௌதமன். இப்படம் அணைத்து வயதினரை கவர்வதோடு, திரையுலகில் மாபெரும் அதிர்வலையை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios