MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டாரா யாஷ்? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த KGF நாயகி

படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டாரா யாஷ்? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த KGF நாயகி

கே.ஜி.எஃப் படத்தில் நடித்தபோது நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2023, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் படங்களில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். கே.ஜி.எஃப் படங்களுக்கு பின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தொடர்ந்து தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், இவர் தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன கோப்ரா படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி.

24

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தமிழில் அறிமுகமான முதல் படமே தோல்வி அடைந்ததால், கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு மீண்டும் கன்னட திரையுலகம் பக்கமே சென்றுவிட்டார் ஸ்ரீநிதி. அங்கும் இவருக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. கே.ஜி.எஃப் படங்களின் வெற்றியால் அதிகளவில் சம்பளம் கேட்பதே இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததற்கான காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விசேஷ வீட்டில் வெடித்த சண்டை! சூழ்ச்சி வலையில் சிக்கிய ஜீவா! இரண்டாக உடையும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம்?

34

இப்படி நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில், அவரையும் யாஷையும் பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. அது என்னவென்றால், கே.ஜி.எஃப் படத்தில் நடித்தபோது நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதன் காரணமாக இனிமேல் அவருடன் நடிக்கவே கூடாது என ஸ்ரீநிதி ஷெட்டி முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

44

இதுகுறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : “தவறான தகவல்களை பரப்புவதற்காகவே சிலர் சோசியல் மீடியாவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நான், அன்பையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்த அதை பயன்படுத்துகிறேன். ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கே.ஜி.எஃப் உலகத்தில் பணியாற்றியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். யாஷ் ஒரு உண்மையான ஜெண்டிமேன், நல்ல நண்பர் மற்றும் என்னை ஊக்குவிப்பவர். எப்போதும் நான் அவரது ரசிகை தான்” என பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரீநிதி.

இதையும் படியுங்கள்...  Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Recommended image2
என் மகனை நெருங்காதே! - ஆனந்தியை எதிர்க்கும் அன்புவின் அம்மா! அக்காவுக்காக ஆனந்தி எடுத்த விபரீத முடிவு.. சிங்கப் பெண்ணே ஹைலைட்ஸ்!
Recommended image3
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved