தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கும் தோனி... முதல் படத்திலேயே ரோலெக்ஸ் சூர்யா போல் செம்ம மாஸ் எண்ட்ரியாமே!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி, தமிழ் சினிமாவின் மூலம் நடிகராக களமிறங்க உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் கூட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வென்றது. இதன்மூலம் அதிகமுறை கோப்பையை வென்ற கேப்டன் என்கிற பட்டியலில் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை இருவருமே 5 முறை கோப்பையை வென்றுள்ளனர்.
இப்படி கிரிக்கெட்டில் பிசியாக இருக்கும் தோனி, தற்போது சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். அவர் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் நடத்தி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் முதன்முதலில் தமிழ் படத்தை தான் தயாரித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்? என்ன தான் பிரச்சனை.. உண்மையை உடைத்த பயில்வான்!
அதன்படி தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம் எல்ஜிஎம். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். மேலும் நதியா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், எல்.ஜி.எம் படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் லீக் ஆகி உள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் தோனியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது தான். ஒருவேளை தோனி நடித்திருந்தால், இதுதான் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். இதற்கு முன்னர் ஏராளமான விளம்பரங்களில் தோனி நடித்துள்ளதால், இதில் ரோலெக்ஸ் மாதிரி செம்ம மாஸான கெஸ்ட் ரோலில் தோனி நடித்திருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 2-வது குழந்தை பிறந்தாச்சு... மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன் - குவியும் வாழ்த்துக்கள்