- Home
- Cinema
- 2-வது குழந்தை பிறந்தாச்சு... மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன் - குவியும் வாழ்த்துக்கள்
2-வது குழந்தை பிறந்தாச்சு... மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன் - குவியும் வாழ்த்துக்கள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் டைட்டில் வின்னர் ஆன ஆரி அர்ஜுனன் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார்.

Aari
ஷங்கர் தயாரித்த ரெட்டைச்சுழி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் ஆரி. அப்படத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குனர்களாக பாலச்சந்தரும், பாரதிராஜாவும் இணைந்து நடித்திருந்தனர். இருப்பினும் அப்படம் பெரியளவில் ஆரிக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை படம் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர் நயன்தாரா உடன் சேர்ந்து மாயா என்கிற திரைப்படத்தில் நடித்த ஆரியை மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஆரி, இறுதிப்போட்டி வரை முன்னேறியதோடு, பைனலில் பாலா உடன் போட்டி போட்டு டைட்டிலையும் தட்டித் தூக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார் ஆரி.
இதையும் படியுங்கள்... சுனாமி, கொரோனாலாம் வரும்னு ஏன் யாரும் முன்கூட்டியே சொல்லல? ஜோதிடர்களை கதிகலங்க வைத்த எதிர்நீச்சல் மாரிமுத்து
aari arjunan
தற்போது இவர் கைவசம் அலேகா, பகவான், டி.என் 43 என மூன்று படங்கள் உள்ளன. இவை விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. நடிகர் ஆரிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் இலங்கை தமிழ் பெண்ணான நதியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த ரியா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தான் தற்போது மீண்டும் தந்தையாகி உள்ளதாக நடிகர் ஆரி அர்ஜுனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Aari
அந்த பதிவில் அனைவருக்கு இனிய காலை வணக்கம், 9 மாதம் காத்திருப்புக்கு பின் நான் இப்போது ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன். குட்டி இளவரசனுக்கு பெருமைமிகு தந்தை ஆனதில் மகிழ்ச்சி என பதிவிட்டு இருந்தார். ஆரி அர்ஜுனனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஜவானில் ஸ்டைலிஷ் வில்லனாக விஜய் சேதுபதி... வைரலாகும் மக்கள் செல்வனின் மாஸ் லுக் போஸ்டர்