- Home
- Cinema
- வசூலில் டம்மியான டிடி நெக்ஸ்ட் லெவல்; டாப் கியரில் செல்லும் மாமன்! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
வசூலில் டம்மியான டிடி நெக்ஸ்ட் லெவல்; டாப் கியரில் செல்லும் மாமன்! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
சூரி நடித்த மாமன் திரைப்படமும், சந்தானத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Maaman and DD Next Level Box Office
தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களாக கலக்கி வந்த சூரியும், சந்தானமும் தற்போது முழுநேர ஹீரோவாகிவிட்டனர். இவர்களில் யாருக்கு மவுசு அதிகமாக உள்ளது என்பதை சோதித்துப் பார்க்க தற்போது முதன்முறையாக சூரியின் மாமன் படமும் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும் மே 16ந் தேதி திரையரங்குகளில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனது. இதில் மாமன் திரைப்படம் குடும்ப கதை, டிடி நெக்ஸ்ட் லெவல் காமெடி கலந்த ஹாரர் படமாக வெளிவந்தது.
சூரியின் மாமன்
சூரியின் மாமன் திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கி பிரபலமானார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சுவாசிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல்
டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு சந்தானம் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார். இப்படத்தில் சந்தானத்துடன் கெளதம் மேனன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், கஸ்தூரி என ஒரு நட்சத்திர படையே நடித்திருந்தது. இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இளம் இசையமைப்பாளர் ஆப்ரோ இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
வசூலில் டிடி நெக்ஸ்ட் லெவலை முந்திய மாமன்
பாக்ஸ் ஆபிஸில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் காட்டிலும் மாமன் திரைப்படம் தான் சக்கைப்போடு போட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் இரண்டு படங்களும் போட்டிபோட்டு வசூலித்தாலும், வார நாட்களில் சூரியின் மாமன் படம் தான் வசூலில் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. அதன்படி புதன்கிழமை தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெறும் ரூ.86 லட்சம் தான் வசூலித்து இருந்தது. ஆனால் சூரியின் மாமன் திரைப்படம் அதைவிட டபுள் மடங்கு... அதாவது ரூ.1.69 கோடி வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இந்த இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளன.