நாக சைதன்யா நடித்து வெளியான படங்களில் சோபிதாவிற்கு பிடித்த படம், பிடிக்காத படம் எது?
Sobhita Dhulipala Most Liked Naga Chaitanya Movies : நாக சைதன்யாவின் படங்களில், ஷோபிதாவுக்குப் பிடிக்காத படம் எது தெரியுமா? இந்தப் படத்தை ஏன் நடிச்சீங்கன்னு கேட்பாங்களாம். அவங்களுக்குப் பிடிச்ச படம் எதுன்னு தெரியுமா?

நாக சைதன்யா
Sobhita Dhulipala Most Liked Naga Chaitanya Movies : தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தா உடனான விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் தொடர்பான ஆவணப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி அந்த ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமே ரூ.50 கோடி கொடுத்து வாங்கியதாகவும் தகவல் வெளியானது. எனினும், இது குறித்து நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா தம்பதியினர் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
தண்டேல் படத்தின் வசூல்
திருமணமாகி 2 மாதங்கள் ஆன நிலையில் கணவன் மனைவியாக இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு வருகின்றனர். இப்போது ஒருவர் பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இருவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால், படங்களின் வெற்றியில் எந்த படம் பிடிக்கும், தோல்வி படங்களில் ஏன் அந்த படங்களில் நடித்தீர்கள் என்பது குறித்த கருத்துக்களை இப்போது இருவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அக்கினேனி மூன்றாம் தலைமுறை வாரிசாக சினிமாவில் நுழைந்த நாக சைதன்யா, தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. நடிப்பிலும் கதாபாத்திரத் தேர்விலும் நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்.
நாக சைதன்யா சோபிதா துலிபாலா
மென்மையான கதாபாத்திரங்களுடன், கதாபாத்திரத்திற்காக உயிரைக் கொடுக்கும் நடிகராகவும் நாக சைதன்யாவுக்குப் பெயர் உண்டு. 7ஆம் தேதி வெளியான தண்டேல் படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்றார். இந்தப் படம் 2 நாட்களில் நாளில் உலகளவில் ரூ.25 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோபிதா துலிபாலாவை மணந்ததில் இருந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். சமந்தாவுடனான 7 ஆண்டு காதல், திருமணம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து என தன் வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாகவும், எந்த வேலை செய்தாலும் சோபிதாவிடம் ஆலோசனை கேட்பதாகவும் கூறுகிறார்.
சோபிதாவிற்கு பிடித்த நாக சைதன்யாவின் படங்கள்
நாக சைதன்யாவின் காதல் கதைகள் அருமையாக இருக்கும். ஆனால், மாஸ் இமேஜுக்காக முயற்சி செய்த சில படங்கள் தோல்வியடைந்தன. அதில் ஒன்றுதான் பெஜவாடா. இந்தப் படம் சோபிதாவிற்கு பிடிக்காதாம். இந்தப் படத்தை எப்படி நடிச்சீங்கன்னு கேட்பாங்களாம். நாக சைதன்யா காதல் நாயகனாக நடித்த படங்கள் சோபிதாவுக்குப் பிடிக்குமாம். குறிப்பாக சமந்தாவுடன் நடித்த ஏ மாய சேசாவே படம் ரொம்பப் பிடிக்குமாம்.
தற்போது சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்த தண்டேல் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக நாக சைதன்யாவிற்கு சோபிதா துலிபாலா வாழ்த்து தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.