கமலால் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த தர்ம அடி... பப்ளிக்கில் பளார் என அடிவாங்கிய சினிமா பிரபலங்களின் பட்டியல்
சினிமா பிரபலங்கள் பொது வெளியில் தர்ம அடி வாங்கிய சம்பவங்கள் தமிழ் நாட்டிலேயே நிறைய நடந்திருக்கின்றன, அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமா பிரபலங்கள் படங்களில் எதிரிகளை நடுரோட்டில் போட்டு அடித்து உதைப்பதை பார்த்திருக்கிறோம். அதேபோன்ற சம்பவத்தை ரியல் லைஃபிலும் சிலர் எதிர்கொண்டு உள்ளனர். அப்படி பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய தமிழ் சினிமா பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் காக்கிசட்டை பட ரிலீஸ் சமயத்தில் கமல் ரசிகர்களிடம் தர்ம அடி வாங்கினார். காக்கி சட்டை படத்தில் கமலை கிண்டலடித்ததற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த சிவகார்த்திகேயனுக்கு அங்கிருந்த கமல் ரசிகர்கள் திடீரென வந்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் நடக்கும் போது கமலும் அதே விமான நிலையத்தில் தான் இருந்தாராம். பின்னர் பேட்டி ஒன்றில் இதுபற்றி கேட்டபோது அப்படி ஒரு சம்பவமே நடக்கலையே என கூறி எஸ்கேப் ஆகி இருக்கிறார் ஆண்டவர்.
விஜய் சேதுபதி
சிவகார்த்திகேயனை போல் விஜய் சேதுபதிக்கும் இதுபோன்ற ஒரு கசப்பான சம்பவம் ஏர்போர்டில் நடந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த விஜய் சேதுபதியை எட்டி உதைக்க ஒருவர் முயன்றுள்ளார். நல் வாய்ப்பாக அந்த அடி விஜய் சேதுபதியின் பாதுகாவலர் மீது விழுந்துள்ளது. அவருடன் போட்டோ எடுக்க விடாததால் தான் இப்படி நடந்ததாக கூறப்பட்டாலும், முத்தையா முரளிதரனி வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதால் தான் இந்த தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்னவென்று சொல்லாமல் அந்த பிரச்சனையை அப்படியே மூடி மறைத்து விட்டனர்.
இதையும் படியுங்கள்... நண்பேண்டா... சிவகார்த்திகேயனுக்கு விஜய் சேதுபதி செய்தது போல் விஷாலுக்காக களமிறங்கிய பிரபலம்
விஷால்
நடிகர் விஷாலும் ஏடாகூடமாக பேசி தர்ம அடி வாங்கி இருக்கிறாராம். குறிப்பாக நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியின் வெற்றிபெறப்போவதை அறிந்த எதிர் அணியினர், விஷாலை தனியாக கூட்டிச் சென்று வச்சு செய்தார்களாம். பின்னர் மீடியா முன் நடந்ததைக் கூறி அதையே அனுதாபமாக மாற்றி அவர் மயக்கம் போட்ட சம்பவமெல்லாம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
வடிவேலு
மதுரையில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றிருந்த வடிவேலு, அங்கு வந்திருந்த சிலரிடம் தானும் டெரரான ஆள் தான் என பில்டப் கொடுத்து பேசி இருக்கிறார். மதுரைக்காரர்களிடம் லந்து கொடுத்தால் சும்மா விடுவார்களா, அவர்கள் தங்கள் பங்கிற்கு செம்ம அடி கொடுத்திருக்கிறார்கள். அந்த கோபத்தில் தான் 2011-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் பரப்புரை சமயத்தில் விஜயகாந்தை தரக்குறைவாக பேசினாராம் வடிவேலு.
ஸ்ருதிஹாசன்
மற்ற நடிகர்களை ஒப்பிடுகையில், ஸ்ருதிஹாசனுக்கு ஆப்பு வீடு தேடியே வந்திருக்கிறது. மும்பையில் அவர் வீட்டில் வசித்தபோது, ஒருவர் வந்து வீட்டின் கதவை தட்டினாராம். உடனே கதவை திறந்த ஸ்ருதிஹாசனை தலையை பிடித்து தரதரவென இழுத்து அடித்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... ‘The Elephant Whisperers’ புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு குடியரசு தலைவர் பாராட்டு..