‘The Elephant Whisperers’ புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு குடியரசு தலைவர் பாராட்டு..

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குடியரசு தலைவரை சந்தித்தனர்.

The Elephant Whisperers Bomman and Bellie were felicitated by the President of India

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "The Elephant Whisperers" என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய தயாரிப்பு இதுதான். நீலகிரி மாவட்டம் முதுமலையில் வசித்து வரும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதிக்கும், ரகு, அம்மு என்ற யானைகளுக்கும் இடையே இருந்த ஆழமான அன்பையும், பாசத்தையும் உணர்வுப்பூர்வமாக விவரித்திருந்தது அந்த ஆவணப்படம். 

மேலும் முதுமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன், பெள்ளி தம்பதி உலகளவில் பிரபலமானார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலத்திற்கு அந்த தம்பதியை அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இதனிடையே பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு வந்திருந்த போது முதுமலைக்கு சென்று பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து பேசி வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குடியரசு தலைவரை சந்தித்தனர். இந்த தம்பதிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார். ஆதரவற்ற யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்த பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடனிருந்தார்.

 

நண்பேண்டா... சிவகார்த்திகேயனுக்கு விஜய் சேதுபதி செய்தது போல் விஷாலுக்காக களமிறங்கிய பிரபலம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios