நண்பேண்டா... சிவகார்த்திகேயனுக்கு விஜய் சேதுபதி செய்தது போல் விஷாலுக்காக களமிறங்கிய பிரபலம்
மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்தது போல் விஷாலின் மார்க் ஆண்டனி படத்திற்காக பிரபல நடிகர் களமிறங்கி உள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலங்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்ற திரையுலகினர் இடையே இல்லை என்பது ஒரு விவாதமாகவே இருந்து வருகிறது. தெலுங்கில் ஏதேனும் ஒரு புதுமுக நடிகரின் படம் வந்தால், அதனை புரமோட் செய்யும் விதமாக முன்னணி நடிகர்கள் அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இது அப்படத்திற்கு பலமாகவும் அமையும். தெலுங்கு பிரபலங்களைப் போல் தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் அப்படி செய்வதில்லை என்பது குற்றச்சாட்டாகவே இருந்து வந்தது.
தற்போது படிப்படியாக அந்த டிரெண்ட் மாறி வருகிறது. சமீப காலமாக திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முன்னணி நடிகர்கள் முன் வந்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அவரின் குரலில் சோழர்களின் வரலாறை கேட்கும் போது அது அனைவரையும் சிலிர்ப்படைய செய்தது.
இதையும் படியுங்கள்... ரஜினியை வைத்து வேறமாரி சம்பவம் செய்துள்ள நெல்சன்... இணையத்தில் லீக் ஆனது ஜெயிலர் படக் கதை?
அந்த வகையில், அண்மையில், நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருந்தார். அப்படத்திற்கு அவரது குரல் மிகப்பெரிய பலமாகவும் அமைந்தது. மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் மீதுள்ள நட்புக்காக இப்படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததாகவும், இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது அடுத்தபடியாக விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்துக்காக நடிகர் கார்த்தி பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தின் கதையை விவரிக்கும் வகையில் ஆரம்பத்தில் இடம்பெறும் காட்சிக்காக கார்த்தி குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நட்புக்காக கார்த்தி செய்துள்ள இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த டிரெண்ட் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... பொதுமக்களை கால் கடுக்க நிற்கவைத்த ஆட்சியருக்கு மாமன்னன் டிக்கெட்டை வாங்கி கொடுத்து பார்க்க சொன்ன பாமக நிர்வாகி