MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தியேட்டரில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்யப்படும் பராசக்தி - எப்போ ரிலீஸ் தெரியுமா?

தியேட்டரில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்யப்படும் பராசக்தி - எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் பராசக்தி. இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 22 2026, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Parasakthi Movie OTT Release
Image Credit : X/DawnPictures

Parasakthi Movie OTT Release

நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் மிக முக்கியமான படம் பராசக்தி. அவர் நடிப்பில் வெளியான 25-வது படம் இதுவாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனின் தம்பி கதாபாத்திரத்தில் அதர்வா நடித்திருந்தார். மேலும் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

24
100 கோடி வசூலித்த பராசக்தி
Image Credit : X

100 கோடி வசூலித்த பராசக்தி

ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சுதா கொங்கராவின் டச் மிஸ் ஆனதாக விமர்சகர்கள் கூறி இருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர். இப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரம் நன்கு வசூலித்து வந்த நிலையில், பொங்கலுக்கு தலைவர் தம்பி தலைமையில் ரிலீஸ் ஆனதில் இருந்து படத்தின் வசூல் சரிவை சந்திக்க தொடங்கியது. இதனால் இந்த வாரத்தோடு இப்படத்தின் ஓட்டம் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
டான் முதல் பராசக்தி வரை... 100 கோடி வசூலை வாரிசுருட்டிய டாப் 5 சிவகார்த்திகேயன் படங்கள்..!
Related image2
Parasakthi: பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த பான்-இந்தியா ஸ்டார்.! யார் தெரியுமா?! ஷாக்கிங் அப்டேட்!
34
பராசக்தியின் ஆட்டம் முடிந்தது
Image Credit : X

பராசக்தியின் ஆட்டம் முடிந்தது

கடந்த வாரம் வரை கோடிகளில் வசூல் அள்ளி இருந்த பராசக்தி திரைப்படம், தற்போது லட்சங்களுக்கு சரிந்துள்ளது. இந்த வாரம் திரெளபதி 2, ஹாட் ஸ்பாட் 2 ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதால், பராசக்தியின் ஓட்டம் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கி வருவதால், பராசக்தி திரைப்படத்தை ஓடிடிக்கு பார்சல் பண்ண முடிவு செய்துள்ளனர். அதன்படி அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

44
ஓடிடியில் எப்போ ரிலீஸ்?
Image Credit : X

ஓடிடியில் எப்போ ரிலீஸ்?

வழக்கமாக தமிழ் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடும். ஆனால் பராசக்தி படத்தை 48 நாட்கள் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்வோம் என கூறி இருந்தனர். அதன்படி பார்த்தால் பிப்ரவரி மாத இறுதியில் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றி இருந்தது. பிப்ரவரி மாத இறுதியில் பராசக்தி திரைப்படம் ஜீ5 ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பராசக்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Related Stories
Recommended image1
டான் முதல் பராசக்தி வரை... 100 கோடி வசூலை வாரிசுருட்டிய டாப் 5 சிவகார்த்திகேயன் படங்கள்..!
Recommended image2
Parasakthi: பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த பான்-இந்தியா ஸ்டார்.! யார் தெரியுமா?! ஷாக்கிங் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved