- Home
- Cinema
- டான் முதல் பராசக்தி வரை... 100 கோடி வசூலை வாரிசுருட்டிய டாப் 5 சிவகார்த்திகேயன் படங்கள்..!
டான் முதல் பராசக்தி வரை... 100 கோடி வசூலை வாரிசுருட்டிய டாப் 5 சிவகார்த்திகேயன் படங்கள்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த பராசக்தி திரைப்படம் 100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாம். இதற்கு முன் 100 கோடி வசூல் அள்ளிய அவரின் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Sivakarthikeyan 100 crore Movies
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்றவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக அதிக வசூல் அள்ளும் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ச்சியாக 100 கோடி வசூலை அள்ளி வருகின்றன. அந்த வகையில் இதுவரை அவர் நடித்து 100 கோடி வசூல் அள்ளிய டாப் 5 படங்களைப் பற்றி பார்க்கலாம்.
டாக்டர்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முதன்முதலில் 100 கோடி வசூல் அள்ளிய படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் கடந்த 2021ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டாவதாக நூறு கோடி வசூல் அள்ளிய திரைப்படம் டான். சிபி சக்கரவர்த்தி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.
அமரன்
நடிகர் சிவகார்த்திகேயனின் கெரியரில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய திரைப்படம் அமரன். கமல்ஹாசன் தயாரித்த இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
மதராஸி
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் மதராஸி. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் 100 கோடிக்கு மேல் அள்ளியது.
பராசக்தி
சிவகார்த்திகேயன் கெரியரில் 100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திய ஐந்தாவது படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்படம் 100 கோடி வசூல் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

