- Home
- Cinema
- பராசக்தி படம் பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்.... சக்சஸ் மீட்டில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
பராசக்தி படம் பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்.... சக்சஸ் மீட்டில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.கே. படம் பார்த்த ரஜினி சொன்ன விமர்சனத்தை கூறி உள்ளார்.

Parasakthi Review by Rajinikanth
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆன படம் பராசக்தி. இப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன், குரு சோமசுந்தரம், சேத்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இது அவரின் 100வது படமாகும். இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் சுதா கொங்கரா.
பராசக்தி சக்சஸ் மீட்
பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் செழியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தின் சக்சஸ் மீட்டை படகுழுவினர் நடத்தி உள்ளனர். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் படம் பார்த்த விஷயத்தை பற்றி பேசினார்.
பாராட்டிய ரஜினிகாந்த்
அதன்படி ரஜினிகாந்த் நேற்று படம் பார்த்து தனக்கு போன் போட்டதாகவும், ரொம்ப போல்டான திரைப்படம், படத்தின் இரண்டாம் பாதி சூப்பர்... சூப்பர் என பாராட்டினாராம். நான் நடித்த டான் படம் தொடங்கி தொடர்ச்சியாக என்னுடைய படங்களை பார்த்து பாராட்டி வருகிறார் என கூறி உள்ளார். சிவகார்த்திகேயன், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி தவிர கமல்ஹாசனும் ரிலீசுக்கு முன்பே பராசக்தி படத்தை பார்த்து பாராட்டினாராம்.
கமல் புகழாரம்
அமரன் படம் பார்த்து கூட 2 நிமிடம் தான் பாராட்டினார், ஆனால் பராசக்தி படத்தை பார்த்து 5 நிமிடங்களுக்கு மேல் பாராட்டி பேசியதாக பூரிப்புடன் கூறினார் சிவகார்த்திகேயன். மேலும் நடிகை ராதிகா சரத்குமாரும் தன்னை பாராட்டியதாக கூறிய சிவகார்த்திகேயன். படத்துக்கு படம் நீங்கள் மெருகேறி வருவதாக அவர் தெரிவித்தாராம். இப்படி பிரபலங்களின் பாராட்டு மழையால் நெகிழ்ந்து போய் உள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

