பாக்ஸ் ஆபிஸில் தளபதி உடன் ஒத்தைக்கு ஒத்த மோத ரெடியாகும் சிவகார்த்திகேயன்!
அமரன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் குஷியான சிவகார்த்திகேயன் தன் அடுத்த படத்தை தளபதி விஜய் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய உள்ளாராம்.

Sivakarthikeyan Ready to Clash with Vijay : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
Parasakthi
நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா, பேசில் ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் சிதம்பரத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்போது இலங்கையில் நடத்தி வருகின்றனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பராசக்தி படத்தில் இணைந்த மின்னல் முரளி; லீக்கான புகைப்படத்தால் ஷாக்கான படக்குழு
Vijay vs Sivakarthikeyan
பராசக்தி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது படமாகும். அதேபோல் இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
Jana Nayagan
அமரன் படத்தின் வெற்றிக்கு பின் அடுத்த தளபதி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயனுக்கு பில்டப் விடப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் தளபதியையே சீண்டிப்பார்க்க தயாராகி உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தியும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... இலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!