MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினிமாவில் தூக்கிவிட்ட இசையமைப்பாளர்களை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்... ஹாரிஸ், தமன் உடன் திடீர் கூட்டணி

சினிமாவில் தூக்கிவிட்ட இசையமைப்பாளர்களை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்... ஹாரிஸ், தமன் உடன் திடீர் கூட்டணி

சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய அனிருத் மற்றும் டி. இமானை அவர் திடீரென கழட்டிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 31 2022, 07:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் வரை 15 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார்.

25

இவற்றுள் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது அனிருத் மற்றும் டி. இமான் தான். சிவகார்த்திகேயனின் சினிமா கெரியர் உயர இவர்களது இசையும் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இவர்கள் இருவரின் இசையில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளன.

35

தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவர் கைவசம் டான், அயலான் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம் மற்றும் தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார் சிவா. இவற்றுள் டான் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

45

இதுதவிர இவர் கைவசம் உள்ள 3 படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களே இசையமைக்க உள்ளனர். அதன்படி அயலான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானும், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு தமனும், ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்க உள்ள படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜும் இசையமைக்க உள்ளனர்.

55

சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய அனிருத் மற்றும் டி. இமானை அவர் திடீரென கழட்டிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதே நிலை தொடருமா அல்லது மீண்டும அவர்களுடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
அனிருத் ரவிச்சந்தர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாங்க பிரிஞ்சிட்டோம்.. ஆனா குழந்தை.. சைந்தவி உடனான உறவு குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்!
Recommended image2
திருடன் எங்கே.. சிக்குவானா சேது? - பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!
Recommended image3
விவாகரத்து டூ விஸ்வரூபம்! சமந்தாவின் 'பீனிக்ஸ்' பயணம்: கன்னட ஸ்டார் துருவா சர்ஜாவுக்கே சவால் விடுவது இதுவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved