தெலுங்கு கற்றுக்கொள்ளும் சிவகார்த்திகேயன்..ஓன் வாய்ஸில் தான் டப்பிங்காம்...
முதல் முறையாக பிரின்ஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் டப்பிங் பேச உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

prince
தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக தரம் உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது டோலிவுட்டில் நேரடியாக அறிமுகமாகிறார். இதற்காக இயக்குனர் அனுமதி சேர்ந்துள்ள இவரின் புதிய படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக பிரின்ஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் டப்பிங் பேச உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.. பல டப்பிங் தெலுங்கு படங்களில் நடித்த பிறகு சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...கிராமத்து நாயகனாக அருண் விஜய்..யானை தமிழக ஷேர் எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் தெலுங்கில் சரளமாக பேச சிவகார்த்திகேயன் நுட்பங்களை கற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக காணப்படுவார் என தெரிகிறது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு...'இந்தியன் 2' படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்
சமீபத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் வெற்றிகளை குவித்தது. தற்போது மாவீரன் படப்பிடிப்பைதுவங்கியுள்ளார். மடோன் அஷ்வின் இயக்கும் இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. மிஸ்கின், சரித்தா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடக்கின்றனர். அதோடு இவர் நடிப்பில் அயலன் படம் திரைக்கு தயாராகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.