ஒரே ஒரு படம் Hit – இப்போ கோலிவுட்டுல இருந்து பாலிவுட்டுக்கு தாவும் சிவகார்த்திகேயன்!
அமரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்தியேனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்போது பாலிவுட் பக்கமும் தலைகாட்ட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் ஆகியோரது வரிசையில் அடுத்ததாக இடம் பெற்றிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அமரன் படம் தான். மறைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதோடு ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை மாற்றிக் காட்டியுள்ளார்.
மதராஸி
இந்தப் படத்திற்கு முன்பு வரை காமெடி, ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் இப்போது ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி பெரியளவில் ரீச் கொடுக்காத நிலையில் அடுத்ததாக பராசக்தியின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை
இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இப்போது சிவகார்த்திகேயன் பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியிடமிருந்து சிவகார்த்திகேயனுக்கு போன் கால் வந்ததாகவும், அவர் உடனே மும்பை சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
பராசக்தி
எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2 மாத ஓய்விற்கு பிறகு அடுத்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. அதுவரையில் பராசக்தி படத்தின் அப்டேட் தான் அடுத்தடுத்து வெளிவரும் என்று கூறப்படுகிறது. அமரனுக்கு பிறகு வெளியான மதராஸி போதுமான வரவேற்பு பெறாத நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் பராசக்தி படத்தை தான் சிவகார்த்திகேயன் நம்பியிருக்கிறார்.