லீக் ஆன அந்தரங்க வீடியோ; வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன், லீக்கான அந்தரங்க வீடியோ பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Siragadikka Aasai Serial actress Shruthi Narayanan : விஜய் டிவியில் சக்கைப் போடு போட்டு வரும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியல் விஜய் டிவியில் அதிக டிஆர்பி அள்ளும் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
கசிந்த அந்தரங்க வீடியோ
சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லியாக நடிக்கும் ரோகிணிக்கு தோழியாக வித்யா என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இவர் இந்த சீரியலில் ரோகிணி செய்யும் அனைத்து கோல்மால் வேலைகளுக்கு துணை நிற்பார் வித்யா. இவருக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான பாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தது.
இதையும் படியுங்கள்... சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஆப்பு; டிஆர்பியில் நம்பர் 1 இடம்பிடித்த சின்ன மருமகள் சீரியல்!
ஸ்ருதி நாராயணன் வீடியோவா அது?
ஒரு சிலரோ இது மார்பிங் வீடியோ என கூறி வந்தாலும், சிலரோ இது ஒரு casting couch வீடியோ எனவும் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்திருக்கிறார்கள் என்றும் கூறி வந்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், டெலிகிராம் என பல்வேறு சோசியல் மீடியா தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வந்தது. இந்த வீடியோவை யாரேனும் திட்டமிட்டு பரவ விட்டார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வீடியோ லீக் ஆன பின்னர் ஸ்ருதி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தை பிரைவேட்டில் போட்டார்.
ஸ்ருதி நாராயணன் விளக்கம்
அதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி நாராயணன் இன்று தனது இன்ஸ்டா பக்கத்தை பப்ளிக்கிற்கு மாற்றி இருக்கிறார். அதில் தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஸ்டோரியில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு, தன்னைப்பற்றி பரவி வரும் வீடியோவுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள் என கேட்டு, பின்னர் உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருக்கிறார் ஸ்ருதி.
இதையும் படியுங்கள்... தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அழைத்த வெற்றிமாறன்; நோ சொன்ன சிறகடிக்க ஆசை நாயகி!