தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அழைத்த வெற்றிமாறன்; நோ சொன்ன சிறகடிக்க ஆசை நாயகி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக நடிக்கும் கோமதி பிரியா, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளார்.

Siragadikka Aasai Gomathi Priya Reject Vetrimaaran Movie : சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திர நாயகிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் செம ரீச் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் டிரெண்டிங்கில் உள்ள சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெற்றி வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கோமதி பிரியா நடித்து வருகிறார். விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீரியலும் இந்த சிறகடிக்க ஆசை தான்.
Siragadikka aasai Serial
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன்னதாக தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்துள்ளார் கோமதி பிரியா. அதில் அவரது நடிப்பை பார்த்து வியந்து தான் சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமாக ஹோம்லி பெண்ணாக நடித்து வரும் கோமதி பிரியாவுக்கு சினிமாவிலும் நடிக்க சான்ஸ் வந்ததாம். ஆனால் அதை தான் நிராகரித்துவிட்டதாக அவரே சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அது என்ன படம் என்பதையும் கோமதி பிரியா கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் இந்த வாரம் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன?
Asuran
அதன்படி அவர் ரிஜெக்ட் செய்த படங்களில் இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படமும் ஒன்றாம். அப்படத்தில் தனுஷின் இளம் வயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க கோமதி பிரியாவை தான் ஆடிஷன் செய்து செலக்ட் பண்ணி இருந்தாராம் வெற்றிமாறன். பின்னர் திருந்நெல்வேலியில் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்து வந்ததால் அசுரன் பட வாய்ப்பை ரிஜெக்ட் பண்ணிவிட்டாராம் கோமதி பிரியா.
Gomathi Priya
கோமதி பிரியா நடிக்க மறுத்த பின்னரே அந்த வாய்ப்பு நடிகை அம்மு அபிராமிக்கு சென்றது. அவருக்கு அந்த கேரக்டர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படி ஒரு சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணியதற்காக தான் வருந்தவில்லை என்றும், அதை ஏற்றிருந்தால் என்னுடைய பாதை சினிமா பக்கம் சென்றிருக்கும். தற்போது சீரியலில் நடிப்பது தனக்கு சந்தோஷமே என கோமதிப் பிரியா சமீபத்திய நேர்காணலில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... புது வரவுகளால் TRP-யில் அதள பாதாளத்துக்கு போன விஜய் டிவி; டாப் 5 லிஸ்டில் கூட இடம்பிடிக்காத சோகம்!