ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்துக்கு டஃப் கொடுக்க அக்டோபர் 18 ரிலீஸ் ஆகும் 5 படங்கள்!
ஆயுத பூஜையை குறிவைத்து ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படம் ரிலீஸ் ஆன நிலையில்... அடுத்த வாரம் திரைக்கு வர உள்ள 5 தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Vettaiyan Release
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில், 4 முதல் 6 படங்கள் வரை வெளியாவது வழக்கம் தான். ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் பின்வாங்கி விடுவது உண்டு. இதற்க்கு காரணம் ஆடியன்ஸ் பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க காட்டும் ஆர்வத்தை வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு காட்ட மாட்டார்கள் என்பது ஒரு காரணம் என்றால்... தியேட்டர் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது என்பது மற்றொரு காரணம்.
இந்த வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு, ரஜினிகாந்தின் 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியான நிலையில், அக்டோபர் 11-ஆம் தேதி அன்று, நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படம் வெளியானது. 'பிளாக்' திரைப்படம் குறைவான திரையரங்குகளில் வெளியான நிலையில்... இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், தியேட்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் 'வேட்டையன்' திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு செம்ம வேட்டையாக அமைந்தாலும், வரும் வாரம், அதாவது அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 5 தமிழ் படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவை எந்தெந்த படங்கள் என்பதை இதில் பார்க்கலாம்.
Sir Movie
சார்:
'வாகை சூடவா' திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் விமல் அழுத்தமான கதையிலும்.. கதாபாத்திரத்திலும் நடித்துள்ள திரைப்படம் சார். இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான, போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இந்த படத்தை எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில், சிராஜ் தயாரித்திருக்கும் இந்த படத்தை வெற்றிமாறன் வழங்க உள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், 'சார்' படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட உள்ள நிலையில், இந்த திரைப்படம் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீசாக உள்ளது. படிப்பு எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு முக்கியம் என்பதை, இந்த படத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட். இப்படம் மூன்று கால கட்டத்திலான ஆசிரியர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என்றும், இப்படம் நடிகர் விமலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?
Aalan
ஆலன்:
'8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் வெற்றி, ஜிவி, காம்ப் ஆப் காதல், வனம், ஜோதி, ஜிவி 2, என தொடர்ந்து எதார்த்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இயக்குனர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இதுவரை வெற்றி நடித்து வெளியான படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் ரொமான்டிக் ட்ராமாவாக உருவாகியுள்ளது. தபியா மதுரா, அருவி மதன் குமார், அனு சித்தாரா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை படத்தை இயக்கியுள்ள ஆர் சிவா தான், ரியஸ் பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
Rocket Driver
ராக்கெட் டிரைவர்:
சமீபகாலமாக திரைப்படங்களை எப்படி வித்யாசமான கதைக்களத்தில் இயக்குனர்கள் எடுக்கிறார்களோ... அதே போல் படங்களின் டைட்டிலும் வித்தியாசமாகவே வைக்கப்படுகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், காமெடி கதைகளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட் டிரைவர். இந்த படத்தில் விஷ்வந்த் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார்.
உலகையே மாற்ற நினைக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செய்யும் விசித்திரமான சம்பவம், அவருடைய வாழ்க்கையில் எப்படி புரட்டி போடுகிறது என்பது பற்றி, கலகலப்பான கதைகளத்தோடு இந்த படம் உருவாகியுள்ளது.
'லால் சலாம்' படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை மூன்றே நாளில் அடித்து பறக்கவிட்ட 'வேட்டையன்'!
Aariyamala
ஆரியமாலா:
கடந்த 1941 ஆம் ஆண்டு, 'ஆரியமாலா' என்கிற பெயரில் வெளியான திரைப்படத்தை தொடர்ந்து... மீண்டும் அதே பெயரிலேயே தற்போது உருவாக்கியுள்ள மற்றொரு திரைப்படம் தான் இந்த புதிய 'ஆரியமாலா'. இயக்குனர் ஜேம்ஸ் யுவன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள 'ஆரியமாலா' திரைப்படத்தில் ஆர் எஸ் கார்த்திக் என்பவர் ஹீரோவாக நடிக்க, மனிஷா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு, தமிழகப் பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்.... தெருக்கூத்து கலைஞரான நாயகனுக்கும், அதை ரசிக்கும் ரசிகைக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெருக்கூத்து கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜாமா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆரியமாலா' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Karuppu Petti
கருப்பு பெட்டி:
விமானத்தில் இருக்கக்கூடிய மிக முக்கிய தொழில்நுட்ப கருவி தான் கருப்பு பெட்டி. இந்த பெயரை வைத்து எடுக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்படம் தான் 'கருப்பு பெட்டி'. இந்த படம் மனரீதியான பிரச்சனைகளை பற்றி பேச உள்ள ஜனரஞ்சகமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எஸ் தாஸ் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில், "ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கும் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் போன்ற, அனைத்து எளிய மக்களுக்கும் கனெக்ட் ஆகும் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே வெளியான நிலையில், அடுத்த வாரம் ஐந்து படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் நிலையில்... வேட்டையனுக்கு இந்த படங்கள் டஃப் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.