MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'லால் சலாம்' படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை மூன்றே நாளில் அடித்து பறக்கவிட்ட 'வேட்டையன்'!

'லால் சலாம்' படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை மூன்றே நாளில் அடித்து பறக்கவிட்ட 'வேட்டையன்'!

Vettaiyan Movie 3rd Day Box Office: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அக்டோபர் 10-ஆம் தேதி வெளியான 'வேட்டையன்' திரைப்படம், தலைவரின் முந்தைய படமான, 'லால் சலாம்' படத்தின் லைஃப் டைம் வசூலை மிஞ்சிவிட்டதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 13 2024, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Rajinikanth Vettaiyan film

Actor Rajinikanth Vettaiyan film

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 ஆம் தேதி, ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 'லால் சலாம்' படத்திற்கு பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தை நடிகர் சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vettaiyan Movie 3rd Day Collection

Vettaiyan Movie 3rd Day Collection

'வேட்டையன்' திரைப்படம் வெளியான அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால், வசூலிலும் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது. ரஜினிகாந்தின் முந்தைய படமான 'லால் சலாம்' படத்தின் லைப் டைம் வசூலை மூன்றே நாட்களில் முடியடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம், இந்திய அளவில், மூன்றாவது நாளில் 26 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 'வேட்டையன்' திரைப்படம் மொத்தம் 81.70 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.

34
Vettaiyan Beat Lal Salaam Collection

Vettaiyan Beat Lal Salaam Collection

உலக அளவில் 100 கோடி வசூலை, இரண்டே நாட்களில் எட்டிவிட்ட 'வேட்டையன்' திரைப்படம், இந்திய அளவில் லால் சலாம் படத்தை விட நான்கு மடங்கு அதிகம் வசூலித்துள்ளது. லால் சலாம் திரைப்படம், இந்தியாவில் மொத்தமாக 17 கோடியும், உலக அளவில் 80 முதல் 90 கோடி வரை மட்டுமே வசூலித்தது. ஆனால், 'வேட்டையன்'  திரைப்படம், உலக அளவில் 3 நாட்களில் 150 கோடியை தாண்டிவிட்டது.

அதே போல், இந்திய அளவில் இதுவரை 81.70 வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 'வேட்டையன்' திரைப்படம் இந்திய அளவில் நூறு கோடி வசூலை அள்ளும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

44
Vettaiyan 3rd Day Box Office Collection:

Vettaiyan 3rd Day Box Office Collection:

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களை தவிர பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடலாக உள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved