102 டிகிரி காய்ச்சல் இருந்தும் ஏ.ஆர்.ரகுமானுக்காக ஹரிஹரன் பாடிய எவர்கிரீன் ஹிட் சாங் பற்றி தெரியுமா?
Singer Hariharan Hit Song : பாடகர் ஹரிஹரன் தனக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தபோதிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்காக ஒரு மாஸ்டர் பீஸ் பாடலை பாடி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
Hariharan, AR Rahman
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அரிய பாடகர்களின் ஹரிஹரனும் ஒருவர். எஸ்.பி.பியை போல் இவரது குரலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும். குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தான் அதிக ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் ஹரிஹரன். அவரது குரலில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, போஜ்புரி, பெங்காலி உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி இருக்கிறார்.
Singer Hariharan
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தான் பாடகராக அறிமுகமானார் ஹரிஹரன். அப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தமிழா தமிழா என்கிற தேசப்பற்று பாடலை பாடி இருந்தார் ஹரிஹரன். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முத்து, பாம்பே, மின்சார கனவு, ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், இந்திரா, இருவர், அலைப்பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு, எந்திரன் என இசைப்புயலின் பெரும்பாலான படங்களில் ஹரிஹரன் பாடல் பாடி இருந்தார்.
இதையும் படியுங்கள்... இசைக்கருவிகள் இன்றி ஏ.ஆர்.ரகுமான் கம்போஸ் செய்த மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?
Hariharan
ஹரிஹரன் வாய்ஸில் இம்பிரஸ் ஆனதால் அவரை தவறாமல் பயன்படுத்தி வந்திருக்கிறார் ரகுமான். அப்படி ஒருமுறை 102 டிகிரி காய்ச்சலுடன் ஹரிஹரன் இருந்தபோது அவருக்கு ஒரு பாடல் பாடல் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தன்னை அறிமுகப்படுத்தியவருக்கு எப்படி நோ சொல்வது என முடிவெடுத்து அந்த காய்ச்சலிலும் அப்பாடலை பாட சென்றிருக்கிறார் ஹரிஹரன். அதுவும் இதுவரை இல்லாத வகையில் ஹை பிட்சில் பாடும் கஷ்டமான பாடலை அன்று கம்போஸ் செய்திருக்கிறார் ரகுமான்.
Malargaley Malargaley Song
102 டிகிரி காய்ச்சலில் உடம்பெல்லாம் நடுங்கும் நிலையில், சென்று அந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார் ஹரிஹரன். அந்தப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறது. அது வேறெதுவுமில்லை... பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளிவந்த லவ் பேர்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற மலர்களே மலர்களே என்கிற மெலடிப் பாடல் தான். அன்று காய்ச்சலோடு அவர் பாடிய அந்த பாட்டு இன்று பலரது காதுகளில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்... பிஸியான அனிருத்.. கடுப்பில் கன்னா பின்னானு சம்பளத்தை ஏற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி?