MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வயிறுமுட்ட சாப்பாடு போட்டு... ஓட்டல் பிசினஸில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ

வயிறுமுட்ட சாப்பாடு போட்டு... ஓட்டல் பிசினஸில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள் லிஸ்ட் இதோ

Tamil cinema celebrities Hotel Business : சொந்தமாக ஓட்டல் பிசினஸ் நடத்தி அதில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 18 2024, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil cinema celebrities Running Hotel Business

Tamil cinema celebrities Running Hotel Business

சினிமாவில் கோடி, கோடியாய் சம்பாதிக்கும் பிரபலங்கள் அதை வேறு தொழில்களில் முதலீடு செய்வது உண்டு. அப்படி சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஓட்டல் பிசினஸில் முதலீடு செய்து மக்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு அதன் மூலம் கோடி கோடியாய் லாபம் ஈட்டி வரும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரியா பவானி சங்கர்

நடிகர்களை போல் நடிகைகளும் ஓட்டல் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கின்றனர். நடிகை பிரியா பவானி சங்கர் சென்னையில் லயம்ஸ் டின்னர் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார். சென்னை மாம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த மல்டி குசைன் ரெஸ்டாரண்டில் சைனீஸ், இத்தாலியன் போன்ற உணவு வகைகள் கிடைக்கும்.

சிம்ரன்

தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். ரசிகர்களால் செல்லமாக இடுப்பழகி என அழைக்கப்படும் இவர் அண்மையில் வெளிவந்த அந்தகன் படத்தில் வில்லியாக மிரட்டி இருந்தார். இவர் சென்னையில் ஓட்டல் பிசினஸும் நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக சென்னை சோலிங்கநல்லூரில் Godka By Simran என்கிற உணவகம் இயங்கி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Madhampatty Rangaraj

Madhampatty Rangaraj

கருணாஸ்

நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் தன்னுடைய காதல் மனைவி கிரேஸ் உடன் இணைந்து ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். இதில் சில ஓட்டல்களை பொருளாதார நெருக்கடியால் அவர் மூடிவிட்டாலும் எஞ்சியுள்ளவை சக்சஸ்புல்லாக நடத்தி வருகிறார். கிரேஸ் தான் இந்த ஓட்டல்களை நிர்வகித்து வருகிறார். 

மாதம்பட்டி ரங்கராஜ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் மாதம்பட்டி ரங்கராஜ், பல விஐபி வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் செய்வது பலரும் அறிந்ததே, ஆனால் அவர் அமெரிக்காவில் சொந்தமாக உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய உணவுகளை அதே சுவையில் கொடுத்து வருகிறார். அவரின் இந்த ஓட்டல் அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... 3 மனைவிகள்; 15 குழந்தைகள்... கல்லூரி மாணவி உடன் கடைசி திருமணம்! கண்ணதாசனின் பிக்பாஸ் பேமிலி பற்றி தெரியுமா?

34
Actor Jiiva

Actor Jiiva

ஜீவா

நடிகர் ஜீவா நடிப்பை தாண்டி தன்னுடைய தந்தையின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸையும் கவனித்து வருகிறார். அவர் சினிமாவை தாண்டி பிசினஸிலும் சக்சஸ்புல்லாக இருக்கிறார். சென்னை தி நகரில் நடிகர் ஜீவாவுக்கு சொந்தமாக ‘ஒன் எம்பி’ என்கிற உணவகம் உள்ளது. இந்த ஓட்டலை ஜீவாவின் மனைவி நிர்வகித்து வருகிறார்.

ஆர்யா

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ஒரு சாக்லேட் பாய் ஆக வலம் வருகிறார். இவரும் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். ஷீ ஷெல் எனப்படும் உணவகத்தை சென்னை வேளச்சேரி மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நடத்தி வருகிறார் ஆர்யா. இவரது ஓட்டலில் பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

44

சூரி

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. அவர் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சைடு கேப்பில் ஓட்டல் பிசினஸையும் நடத்தி வருகிறார். மதுரையில் அவருக்கு சொந்தமான அம்மன் உணவகம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் இந்த உணவகத்தில் எப்போது போனாலும் ஜே ஜேவென கூட்டம் இருக்கும். இந்த உணவகங்களை சூரியின் சகோதரர்கள் கவனித்து வருகிறார்கள்.

அமீர்

பருத்திவீரன், மெளனம் பேசியதே, ராம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அமீர். இவர் தற்போது படம் இயக்காவிட்டாலும் நடிப்பில் பிசியாக இருக்கிறார். இவரும் சொந்தமாக ஓட்டல் ஒன்றை வைத்திருக்கிறார். 4AM Coffee & kitchen என்கிற உணவகத்தை கடந்தாண்டு சென்னை ஈசிஆரில் தொடங்கினார் அமீர். அதிகாலை 4 மணிவரை இந்த உணவகம் இயங்குமாம்.

இதையும் படியுங்கள்... உச்சகட்ட ரொமான்ஸ்.. என் படங்களை பார்க்க கூடாது! கண்டீஷன் போட்டு திருணம் செய்த கமல் - ரஜினி பட ஹீரோயின்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆர்யா
சிம்ரன்
சூரி (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved