- Home
- Cinema
- டிராகன் படம் எப்படி இருக்கு? ரிலீசாகும் முன்னரே படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன சிம்பு
டிராகன் படம் எப்படி இருக்கு? ரிலீசாகும் முன்னரே படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன சிம்பு
Dragon Movie First Review : அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் பார்த்த நடிகர் சிம்பு தன் முதல் விமர்சனத்தை கூறி இருக்கிறார்.

Dragon Movie First Review
லவ் டுடே படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் டிராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Dragon Movie
டிராகன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சினேகா, மிஷ்கின், விஜே சித்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ் பணியாற்றி இருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே தனுஷ் படத்தைவிட டபுள் மடங்கு வசூல்; மாஸ் காட்டும் டிராகன்!
Dragon Movie Pradeep Ranganathan
டிராகன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 37 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகின்றது. முன்பதிவு மூலம் மட்டுமே டிராகன் திரைப்படம் ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்து விட்டது. இதனால் முதல் நாளில் இப்படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிராகன் படத்தை பார்த்த நடிகர் சிம்பு, அப்படத்தின் விமர்சனத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Simbu Watched Dragon Movie
அந்த வகையில் டிராகன் படம் ‘பிளாக்பஸ்டர்’ என குறிப்பிட்டு இருக்கிறார். சிம்பு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக போட்டுள்ள இந்த ஒன்லைன் விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவை வைத்து காட் ஆஃப் லவ் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் சிம்பு - அஸ்வத் கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Theatre Release Movies : காத்துவாங்கும் விடாமுயற்சி; பிப்ரவரி 21ந் தேதி கலெக்ஷன் அள்ள வரும் படங்கள் இத்தனையா?