சிம்பு ஹீரோயின் மஞ்சிமாவா இது? சல்வார் அழகில் சூடேற்றி... இளம் நெஞ்சங்களை சுழட்டி போட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!
தன்னுடைய கொழு கொழு அழகால் இளம் ரசிகர்கள் மனதை கவர்ந்து வரும் நடிகை மஞ்சிமா மோகன், துளியும் கவர்ச்சி இன்றி, விதவிதமான சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன்.
தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, "அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்', 'தேவராட்டம்' என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் சில படங்களே உள்ளன.
மேலும் இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு கதை சொல்ல வந்த பல இயக்குனர்கள் உடல் எடையை குறைக்கும் மாறு கூறியதாக தகவல் வெளியானது.
இதனால் சாப்பாடு பிரியரான இவர் டயட் இருந்து தன்னுடைய உடல் எடையை குறைத்த நிலையில், மீண்டும் சும்மா கொழு மொழு நடிகையாக மாறியுள்ளார்.
பட வாய்ப்புக்காக கவர்ச்சி களம் காண்பதில் துளியும் விருப்பம் காட்டாத மஞ்சிமா தொடர்ந்து, அடக்கம் ஒடுக்கமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, அழகிய ரெட் கலர் சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.