'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடலுக்கு சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல்!
தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் தீ தளபதி பாடலை பாடியுள்ள சிம்பு, இந்த பாடலுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்கிற தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் படத்தின் முழு பணிகளும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், மற்றொரு புறம் படத்தின் புரோமோஷனிலும் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
56 வயது முரட்டு சிங்கிள் நடிகரின் காதல் வலையில் சிக்கிய பூஜா ஹெக்டே..? தீயாய் பரவும் தகவல்
அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற, ரஞ்சிதமே பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான சிம்பு குரலில் வெளியான தீ தளபதி பாடலும், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த பாடலை பாடுவதற்காக, சிம்பு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'வாரிசு' படத்தில் ஒரு பாடலை, சிம்பு பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் தமன் அணுகியபோது, உடனேயே இந்த வாய்ப்பை எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்ட சிம்பு, இந்த பாடலுக்காக பத்து பைசா கூட பணம் வாங்காமல் பாடி கொடுத்தாராம்.
மேலும் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு எவ்வளவு சிம்புவை நிர்பந்தப்படுத்தியும் சம்பளம் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது..அதேபோல் இந்த படத்தில் சிம்பு ஒரு கேமியோ ரோலிலும் நடித்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாக, தளபதி ரசிகர்கள் சிம்புவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.