56 வயது முரட்டு சிங்கிள் நடிகரின் காதல் வலையில் சிக்கிய பூஜா ஹெக்டே..? தீயாய் பரவும் தகவல்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பூஜா ஹெக்டே, 56 வயதாகும் பிரபல நடிகரை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் பிளாப் ஆனதால் டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். முகமூடி படத்தின் தோல்விக்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
இதுதவிர இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பான் இந்தியா நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவுக்கு இந்த ஆண்டு சரிவர அமையவில்லை. 2022-ல் அவர் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் படுதோல்வியை சந்தித்தன. அடுத்ததாக இவர் நடிப்பில் இந்தியில் சர்கஸ் என்கிற பட தயாராகி உள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா.
இதையும் படியுங்கள்... திரிஷாவின் வேறலெவல் டான்ஸ் உடன்... பொன்னியின் செல்வனில் இருந்து நீக்கப்பட்ட ‘சொல்’ பாடல் வீடியோ வெளியானது
மேலும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இதுதவிர சல்மான் கான் தயாரிப்பில் மேலும் இரண்டு இந்தி படங்களிலும் நடிக்க பூஜா ஹெக்டே கமிட் ஆகி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து பூஜா ஹெக்டேவுக்கு சல்மான் கான் வாய்ப்பு அளிப்பதற்கு காரணம் அவர்மீது ஏற்பட்ட காதல் தான் என பாலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகர் சல்மான் கானுக்கு 56 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருந்தாலும், இவருடன் காதல் சர்ச்சையில் சிக்காத பாலிவுட் நடிகைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனா கைஃப் வரை மிகப்பெரிய லிஸ்ட்டே உள்ளது. தற்போது அந்த பட்டியலில் பூஜா ஹெக்டேவும் இடம்பெற்று உள்ளார்.
இதையும் படியுங்கள்... அப்போ 9 படம் டிராப் ஆச்சு.. இப்போ 9 படம் கைவசம் இருக்கு! கட்டா குஸ்தி சக்சஸ் மீட்டில் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி