அப்போ 9 படம் டிராப் ஆச்சு.. இப்போ 9 படம் கைவசம் இருக்கு! கட்டா குஸ்தி சக்சஸ் மீட்டில் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
கட்டா குஸ்தி படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், தனக்கு பிசினஸ் இல்லை எனக்கூறி இதுவரை 9 படங்கள் டிராப் செய்யப்பட்டதாக கூறினார்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் கட்டா குஸ்தி. இப்படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. தமிழில் கட்டா குஸ்தி, தெலுங்கில் மட்டி குஸ்தி என்கிற பெயரில் ரிலீசான இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார்.
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பாலாவுக்கு டாடா காட்டிவிட்டு கிடப்பில் போடப்பட்ட பிரபல டைரக்டரின் படத்தை தூசிதட்டி எடுக்கும் சூர்யா?
இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால், இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்காக தனக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாக கூறினார். அதோடு தான் விவி ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு முக்கிய காரணம் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு தான் என கூறினார்.
தற்போது வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி உள்ளதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு எஃப்.ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த என பிசினஸ் இல்லை எனக்கூறி இதுவரை 9 படங்கள் டிராப் செய்யப்பட்டது என்கிற அதிர்ச்சி தகவலை சொன்ன விஷ்ணு விஷால், தற்போது தன் கைவசம் 9 படங்கள் உள்ளது என நினைக்கும் போது பெருமையாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நடிகரா மட்டும் இல்லேனா இந்நேரம் ஜெயில்ல தான் இருந்திருப்பீங்க! யானைதந்த வழக்கில் மோகன்லாலை பந்தாடிய நீதிபதிகள்