- Home
- Cinema
- திருச்செந்தூர் முருகனுக்கு அரை கிலோ தங்கத்தில் வேல்... காணிக்கையாக செலுத்திய பிரபல ஹீரோ..!
திருச்செந்தூர் முருகனுக்கு அரை கிலோ தங்கத்தில் வேல்... காணிக்கையாக செலுத்திய பிரபல ஹீரோ..!
முருகனாக நடித்த படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றதை அடுத்து தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அரை கிலோவில் தங்க வேல் செய்து காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

Tamil Actor Donate Gold Vel To Tiruchendur Murugan
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தான் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. திருப்பதியை போல் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் திருச்செந்தூருக்கும் வந்துவிட்டது. தினந்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பிரபல தமிழ் நடிகர் ஒருவர் அரை கிலோ தங்கத்தில் வேல் ஒன்றை செய்து அதைக் காணிக்கையாக செலுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகர் யார்? அவர் எதற்காக இதைச் செய்தார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
வேல் காணிக்கையாக செலுத்திய நடிகர் யார்?
அந்த நடிகர் வேறு யாருமில்லை சிம்பு தான். ஆனால் அவர் தற்போது அந்த வேல்-ஐ காணிக்கையாக செலுத்தவில்லை. அவர் கடந்த 1992-ம் ஆண்டு தான் நடித்த ‘எங்க வீட்டு வேலன்’ படம் வெற்றிபெற்றதை அடுத்து முருகனுக்கு 63 பவுனில் வேல் செய்து அதை காணிக்கையாக செலுத்தி இருக்கிறார். இந்த தகவலை சிம்புவின் தந்தையும், எங்க வீட்டு வேலன் படத்தின் இயக்குனருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கிள் பசங்க மற்றும் சரிகமப மகா சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ராஜேந்தர், இந்த அரிய தகவலை கண்ணீர்மல்க பகிர்ந்துகொண்டார்.
சிம்புவால் நெகிழ்ந்த டி ராஜேந்தர்
அதில் ஒரு குழந்தை டி.ராஜேந்தரிடம் வேல் ஒன்றை பரிசாக அளித்தார். அப்போது எங்க வீட்டு வேலன் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். அப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை திருநீர்மலையில் படமாக்கினாராம் டி.ஆர். அதில் சிம்பு கொளுத்தும் வெயிலிலும் வெறுங் காலில் பால் காவடி எடுத்து வரும் காட்சியை எடுத்தாராம். சிம்பு சூடு தாங்க மாட்டார் என்பதால் காலில் சாக்ஸ் மாட்டிக் கொண்டு நடிக்க சொன்னாராம் டி.ஆர். ஆனால் சிம்பு, அவ்வாறு நடிக்க மறுத்து, வெறுங் காலிலேயே அந்த பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்தாராம்.
63 பவுன் தங்கத்தில் வேல்
அந்த முருகனை நம்பி எங்க வீட்டு வேலன்னு சிம்பு ஆடி, ஒரு சாதாரணமா எடுத்த அந்தப் படம் அள்ளியது அத்தனை கோடி என அடுக்குமொழியில் பேசிய டி.ராஜேந்தர், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் 63 பவுனின் தங்கத்தில் வேல் செய்து கொண்டுபோய் தன் மகனுடன் திருச்செந்தூர் கோவிலில் போய் கொடுத்தாராம். அந்த கோவிலில் தன் பையன் சிலம்பரசன் கையால் வச்ச வேல் தான், இன்றைக்கும் தங்கத் தேர் சென்றால் எடுத்து வைக்கிறார்கள். அப்படி கடவுள் நம்பிக்கையோடு இருந்த காரணத்தால் தான் தன் மகன் இன்று வள்ளலாரிடம் சென்று அருள் தேடுகிறார் என டி.ராஜேந்தர் கூறினார். சிம்பு அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்த தங்க வேலின் இன்றைய மதிப்பு ரூ.63 லட்சம் இருக்கும்.