- Home
- Cinema
- படுக்கை அறையில் காதலனுடன் எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதிஹாசன்
படுக்கை அறையில் காதலனுடன் எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதிஹாசன்
படுக்கையறையில் காதலனை கட்டிப்பிடித்தபடி எடுத்த அந்தரங்க போட்டோவை பதிவிட்டு நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன், அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து அவர் விஜய்க்கு ஜோடியாக புலி, அஜித்துடன் வேதாளம் என முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தாலும், இவரால் கோலிவுட்டில் பெரியளவில் சோபிக்க முடிவில்லை.
தமிழில் ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த படம் லாபம். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி. இப்படத்திற்கு பின் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் சுத்தமாக கிடைக்கவில்லை. இதனால் டோலிவுட் பக்கம் ஒதுங்கிய ஸ்ருதிஹாசனுக்கு அங்கு பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... Vani Bhojan : ஜெய் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த நடிகை வாணி போஜன்
தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கே.ஜி,எப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தான் சலார் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், ஷாந்தனு என்கிற டூடுல் கலைஞரையும் காதலித்து வருகிறார்.
தற்போது ஷாந்தனுவும், ஸ்ருதியும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளனர். மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருகின்றனர். தனது காதலுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஸ்ருதி, அண்மையில் ஷாந்தனு உடன் படுக்கையறையில் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த போட்டோவில் ஸ்ருதிஹாசனை ஷாந்தனு இருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போகினர். ஸ்ருதிஹாசன் பதிவிட்ட இந்த அந்தரங்க புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Cool Suresh : திடீரென்று மயங்கி விழுந்த கூல் சுரேஷ்! ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.