- Home
- Cinema
- Jyothika: பாலிவுட் போனதும் இப்படியா? படு மோசமான காட்சியில் நடித்த ஜோதிகா - எகிறும் கண்டனம்!
Jyothika: பாலிவுட் போனதும் இப்படியா? படு மோசமான காட்சியில் நடித்த ஜோதிகா - எகிறும் கண்டனம்!
பாலிவுட் வெப் தொடரில், நடிகை ஜோதிகா நடித்த சர்ச்சை காட்சிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா (Jyothika). மும்பையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு தமிழ் படங்கள் தான் முன்னணி ஹீரோயின் என்கிற அந்தஸ்த்தை கொடுத்து, அரவணைத்தது. எனவே மற்ற மொழிகளை விட தமிழில் தான் அதிகமான படங்களில் நடித்தார். விஜய், சூர்யா (suriya) , விக்ரம் (Vikram), அஜித் (ajith) என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடிபோட்ட ஜோ, காக்க காக்க படத்தில் நடிக்கும் போது நடிகர் சூர்யாவை காதலிக்க துவங்கினார்.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
இந்த படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி இவர்களின் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆன நிலையில்... இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள சூர்யாவின் தந்தை சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், சூர்யாவின் பிடிவாதம் காரணமாக இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டதோடு, திருமணத்திற்கும் பல நிபந்தனைகளை விதித்தார்.
சூர்யாவை திருமணம் செய்ததற்காக பாலியல் ரீதியான பாகுபாட்டை எதிர்கொண்டது குறித்து பேசிய ஜோதிகா!
ஜோதிகாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை:
அதில் முக்கியமான நிபந்தனை ஜோதிகா திரையுலகை விட்டு விலக வேண்டும் என்பது தான். இதனை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டு மருமகளாக மாறிய ஜோதிகா. திருமணத்திற்கு பின்னர் முழுமையாக சினிமாவில் இருந்து விலகியே இருந்தாலும்... 2 குழந்தைக்கு தாயான பின்னர், தன்னுடைய கணவரின் தயாரிப்பிலேயே '36 வயதினிலே' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஜோதிகாவின் இந்த முடிவில் சிவகுமாருக்கு துளியும் விருப்பம் இல்லை என்றாலும், இந்த படத்திற்காக இவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் மனதை மாற்றியது.
மும்பையில் குடியேறிய நடிகை ஜோதிகா:
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து கதையின் நாயகியாக நடிக்க துவங்கிய ஜோதிகா, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறினார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, ஏற்கனவே நடித்த சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவங்களுக்கு 46 வயசுனு சொன்னா யார் நம்புவா! ரெளடி பேபி லுக்கில் ரவுசு காட்டும் ஜோதிகா
புகைபிடிக்கும் காட்சியில் நடிகை ஜோதிகா:
தற்போது பெண்களை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள டப்பா கார்டெல் என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் தான் ஜோதிகா சர்ச்சைக்கு விதமான காட்சியில் நடித்துள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. அதாவது இந்த வெப் தொடரில் ஜோதிகா, சிகரெட் புகைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.