இவங்களுக்கு 46 வயசுனு சொன்னா யார் நம்புவா! ரெளடி பேபி லுக்கில் ரவுசு காட்டும் ஜோதிகா
Jyothika Photoshoot : நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, யங் லுக்கில் நடத்தியுள்ள கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Jyothika
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் ஜோதிகா. முதல் படத்திலேயே தன்னுடைய துறு துறு நடிப்பால் கவனம் ஈர்த்த ஜோதிகாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. குறிப்பாக விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து டாப் ஹீரோயின் ஆனார்.
Suriya wife Jyothika
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன்முறையாக சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்படத்தின் போது ஜோதிகா மீது காதல் வயப்பட்ட சூர்யா, அவரை காதலிக்க தொடங்கினார். சூர்யாவின் காதலுக்கு ஜோதிகாவும் ஓகே சொன்னதால் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
Jyothika Latest Photos
இதையடுத்து காக்க காக்க படத்தில் ஜோடியாக நடித்தபோது இவர்களின் காதல் வலுபெற ஆரம்பித்தது. முதலில் இவர்கள் காதலுக்கு சூர்யா குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் அனுமதிக்காக காத்திருந்தனர். பின்னர் ஒருவழியாக கடந்த 2006ம் ஆண்டு சூர்யா பேமிலி கிரீன் சிக்னல் காட்டியதால் ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா.
Jyothika Instagram Photos
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, கல்யாணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகினார். இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். பிள்ளைகள் வளர்ந்த பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் கம்பேக் கொடுத்தார் ஜோதிகா.
இதையும் படியுங்கள்... Jyothika Speech: அவருக்கு ஹிந்தி பிடிக்காது - குடும்ப சீக்ரெட்டை ஓப்பனா சொன்ன நடிகை ஜோதிகா!
Jyothika Movies
திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோவுடன் டூயட் பாட மாட்டேன் என்கிற கண்டிஷன் உடன் களமிறங்கிய ஜோதிகா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Jyothika Viral Photos
பிள்ளைகளின் படிப்புக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து மும்பையில் குடியேறிய ஜோதிகா, தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் திருப்பி உள்ளார். அங்கு தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து வருகிறார் ஜோதிகா.
Jyothika Age
தற்போது நடிகை ஜோதிகாவுக்கு 46 வயது ஆகிறது. இந்த வயதிலும் இளமை குறையாத அழகோடு ஜோதிகா காட்சியளிப்பதற்கு முக்கிய காரணம் அவரின் பிட்னஸ் தான். தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி வைத்திருக்கிறார் ஜோதிகா.
Jyothika Photoshoot
46 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை ஜோதிகா நடத்தி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறாது. அதில் ரெளடி பேபி லுக்கில் செம கூலாக அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவங்களுக்கு வயசே ஆகாதா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... Jyothika: 47 வயசாகிடுச்சு; அதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடியே நிறுத்திட்டேன்! கூலாக சொன்ன ஜோதிகா!