மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா.! என்ன ஆச்சு? திரையுலகில் பரபரப்பு!
பிரபல காமெடி நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்து.. பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளவர் மனோபாலா. பின்னர் சில திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார்.
இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் மனோபாலா. இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமாக உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவரின் மிகப்பெரிய பிளஸ் என கூறலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக இருக்கும் இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்கும் மனோபாலாவை, நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களும் இவர் விரைவில் பூரண நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.