எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் முடிந்தது! மணமகள் இவரா? புளியங்கொம்பை பிடித்த நடிகர்!
பிரபல தெலுங்கு நடிகரும், தமிழில் 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள, ஷர்வானந்தின் நிச்சயதார்த்தம் முடிந்தது. இவரின் வருங்கால மனைவி குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டோலிவுட் திரையுலகில், 35 வயதை கடந்தும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்களில் ஹீரோவாக இருந்து வந்த ஷர்வானந்த் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில தகவல்கள் பரவி வந்த நிலையில், ஷர்வானந்தின் நிச்சயதார்த்தம் குடியரசு தினமான இன்று நடைபெற்றுள்ளது.
38 வயதான ஷர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்த நிலையில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக ஷர்வானந்தின் சிறு வயது நண்பரும், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான ராம் சரண் தன்னுடைய மனைவி உபாசனாவுடன், இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியை வாழ்த்தியுள்ளனர்.
ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவில் சாப்ட்வேர் வேலை செய்து வருகிறார். தற்போது ஹைதராபாத்தில் இருந்து பணிபுரிகிறார் என கூறப்படுகிறது. ஷர்வானந்துக்கு, ரக்ஷிதா ஒரு பொதுவான நண்பர் மூலம் அறிமுகமாகியுள்ளார். இருவரின் கருத்துக்களும் ஒற்றுபோகவே, நட்பு காதலாக மாறியது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன், தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் விதமாக திருமணத்திற்கு தயாராகியுள்ளனர்.
இவர்களின் திருமணத்தை உறுதி படுத்தும் விதமாக, இன்று காலை ஷர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி ஜோடிக்கு நிச்சயம் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரக்ஷிதா ரெட்டியின் தந்தை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆந்திர முன்னாள் அமைச்சர் போஜ்ஜலா கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தி ஆவார்.
வீர பாண்டிய கட்டபொம்மன் முதல்... துப்பாக்கி வரை! தேசப்பற்றை பறைசாற்றிய திரைப்படங்கள்..!
லேட்டாக திருமணம் செய்து கொண்டாலும், ஷர்வானந்த் ஒரு வலுவான பின்னணி கொண்ட பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்