MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • 'வணங்கான்' படத்தை தொடர்ந்து... வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? ஷாக்கிங் தகவல்!

'வணங்கான்' படத்தை தொடர்ந்து... வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? ஷாக்கிங் தகவல்!

நடிகர் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்து வந்த 'வணங்கான்' படத்தில் இருந்து விலகிய நிலையில், 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 24 2022, 12:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் சூர்யா சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்த 'வணங்கான்' படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்த நிலையில், இதைத் தொடர்ந்து இவர் நடிக்க இருந்த 'வாடிவாசல்' படத்தில் இருந்தும், விலக வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தமிழ் சினிமாவில் தொடர்ந்து, தரமான படங்களை தேர்வு செய்து நடித்தும், தயாரித்தும், வருபவர் சூர்யா. அந்த வகையில் இவர் நடித்த சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் இவர் நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்', 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்... இதுவரை நடிக்கிறாத மாஸ் கேரக்டரில் மிரட்ட வரும் தனுஷ்! ஆச்சர்ய தகவல்!

36

இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக பாலா தரப்பில் இருந்தும், சூர்யா தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிட்டு அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் ட்ராப் ஆனதற்கு இயக்குனர் பாலா தான் முழு காரணம் என்றும், சுமார் 10 கோடி வரை சூர்யாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.

46

இந்த படத்தில் இருந்து விலகி விட்டதால், தற்போது சூர்யா சிறுத்தை சிவா  இயக்கத்தில் நடித்து வரும் 42-வது  படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சுதா கொங்கரா உள்ளிட்ட சில இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே... கணவர் பிரசன்னாவுடன் சினேகா ரொமான்டிக் போட்டோ ஷூட்! கலக்கல் போட்டோஸ்!

56

மேலும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்த ஒப்பந்தமான வாடிவாசல் திரைப்படத்தின்,  டெஸ்ட் சூட் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் குறித்த இவ்வித அப்டேட்களும் வெளியாகாமல் உள்ளது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும், 'விடுதலை' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
 

66

எனவே சூர்யா வாடிவாசல் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எழுத அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகாத நிலையில், வெற்றிமாறன் தரப்பிலிருந்து... வெளியாகியுள்ள தகவலின்படி இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், கூடிய விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய கவர்ச்சியில்... எக்கு தப்பாக உடை அணிந்து கிளாமர் விருந்து வைத்த நடிகை மாளவிகா மோகனன்! போட்டோஸ்...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved