- Home
- Cinema
- Jana Nayagan ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ டைட்டில் கார்டுடன் வெளியான ஜனநாயகன்..
Jana Nayagan ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ டைட்டில் கார்டுடன் வெளியான ஜனநாயகன்..
பல்வேறு தடைகளைக் கடந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று விமரிசையாக வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடைகளை தகர்த்த ஜனநாயகன்..
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமாக இப்படம் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சென்சார் போர்ட் பிரச்சினை, இணையத்தில் படம் கசிவு உள்ளிட்ட பல சிக்கல்களை இத்திரைப்படம் சந்திக்க நேர்ந்தது.
திரை பட்டாளங்களின் சங்கமம்
இறுதியாக பல்வேறு தடைகளைத் தாண்டி இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 8000 ஸ்கிரீன்களில் வெளியாகி உள்ளது. தமிழகம் தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் காலை 9 மணியளவில் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
திருவிழா கோளம் பூண்ட திரையரங்குகள்
பொதுவாகவே விஜய் படம் என்றால் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதிலும் இப்படம் விஜய்யின் கடைசி படம் கடந்த இரு தினங்களாகவே திரையரங்குகள் முன்பாக பேனர் அமைத்தல், தோரணம் உருவாக்குதல் உள்ளிட்டப் பணிகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதல் திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க படுஜோராக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் DJ பார்ட்டி அமைக்கப்பட்டு விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.
Peak #CMVijay Title card 🥵🔥 pic.twitter.com/T2IEbx1Pk1
— Vijay Fans Trends (@VijayFansTrends) July 23, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
பொதுவாக தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகும் படம் தற்போது முதல் முறையாக “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டுடன் வௌயானது.
Thank you & love you @actorvijay ❤️❤️ pic.twitter.com/soDCOT5cMj
— Vijay Fans Trends (@VijayFansTrends) July 22, 2026
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

