MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் மச்சினிச்சி ஷாமிலியின் 'ஷீ' ஆர்ட் கேலரி திறப்பு விழா..! ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

அஜித் மச்சினிச்சி ஷாமிலியின் 'ஷீ' ஆர்ட் கேலரி திறப்பு விழா..! ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

நடிகை என்பதை தாண்டி ஒரு ஓவியராக அவதாரம் எடுத்துள்ள ஷாம்லி, தன்னுடைய 'ஷீ' ஆர்ட் கேலரியை ஓப்பன் செய்த நிலையில்... பல பிரபலங்கள் இதில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 27 2023, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய மொழிகளில் அறிமுகமாகி, சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்று பிரபலமானவர் ஷாம்லி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211

குழந்தையாக இருக்கும் போது, ரசிகர்களை தன்னுடைய துரு துரு நடிப்பால் கவர்ந்த ஷாம்லியால் ஏனோ... கதாநாயகியாக நடிக்கும் போது கவரமுடியாமல் போனது. 

எங்க குழந்தைக்கு பேரு தேர்வு செஞ்சாச்சு! பெயர் சூட்டு விழா பற்றி அறிவித்த ராம் சரண் - உபாசனா ஜோடி!

311

தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால், பட வாய்ப்புகள் கிடைக்காமல்... ஒரு நிலையில் திரையுலகில் இருந்தே முழுமையாக விலகினார்.

411

ஷாம்லியின் ஆர்வத்தை கண்டறிந்து அவரை ஊக்கப்படுத்தி வந்தார் அக்கா கணவர் அஜித். அவரின் வழிகாட்டுதல் படி, ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

உச்சகட்ட அதிர்ச்சி..! நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில்... ஒரே நாளில் ஏற்பட்ட அடுத்தடுத்த மரணங்கள்!

511

குறிப்பாக ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சியோடு பல ஓவிய படைப்புகளை உருவாக்கினார் ஷாம்லி.

611

ஷாம்லியின் ஓவியங்களின் தனி சிறப்பு என்றால், அவர் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமாகவும். ‌ பெண்களின் சுதந்திரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

அஜித் - ஷாலினி முதல் கௌதம் - மஞ்சிமா வரை ரீல் ஜோடியாக நடித்து.. ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள்!

711

இவரது படைப்புகள் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் இடம்பெற்றது.

811

அதே போல் சமீபத்தில் துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்திலும் கண்காட்சியாக தன்னுடைய ஓவியங்களை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட ஓவியர்கள் கலந்து கொண்டு, தங்களின் படைப்புக்களை காட்சி படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது என்ன குஷ்புவுக்கு வந்த சோதனை? மீண்டும் அதே பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

911

இதை தொடர்ந்து தன்னுடைய ஓவிய படைப்புகளை அனைவரும் பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் 'ஷீ' என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் ஷாலினி, அவரின் மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா உள்ளிட்ட அனைவருமே கலந்து கொண்டனர். அஜித் விடா முயற்சி படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

1011

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

1111

புகழ்பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணியும் இந்த ஆர்ட் கேலரியை பார்வையிட்டார். அப்போது நடிகை ஷாலினி, அவரது சகோதர ரிச்சர்ட் மற்றும் தங்கை ஷாமிலி ஆகியோருடன் அவர் கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம் தான் இது.

இதையும் படியுங்கள்... டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved