MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எங்க குழந்தைக்கு பேரு தேர்வு செஞ்சாச்சு! பெயர் சூட்டு விழா பற்றி அறிவித்த ராம் சரண் - உபாசனா ஜோடி!

எங்க குழந்தைக்கு பேரு தேர்வு செஞ்சாச்சு! பெயர் சூட்டு விழா பற்றி அறிவித்த ராம் சரண் - உபாசனா ஜோடி!

'எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்'' என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார்.   

2 Min read
Author : manimegalai a
Published : Jun 23 2023, 10:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்சரண் பேசுகையில், '' உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்களுடைய குழந்தை கடந்த இருபதாம் தேதியன்று பிறந்தார். தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள். 

அஜித் - ஷாலினி முதல் கௌதம் - மஞ்சிமா வரை ரீல் ஜோடியாக நடித்து.. ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள்!
 

36

டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹா, டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி, தேஜஸ்வினி உள்ளிட்ட  சிறந்த சிகிச்சையை வழங்கிய மருத்துவ குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆதரவினை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது என கூறினார். 

46

மகள் பிறந்த செய்தியை கேட்டவுடன் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நிலையான ஆதரவையும், நிபந்தனையற்ற அன்பையும் செலுத்தி வரும் ரசிகர்கள்.. அதனை என்னுடைய மகளுக்கும் தருவார்கள் என நம்புகிறேன். 

இது என்ன குஷ்புவுக்கு வந்த சோதனை? மீண்டும் அதே பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

56

என் மகளுக்கு அவள் பிறந்த தேதியிலிருந்து நாட்கள் கழித்து பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம். அவளுக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அது என்ன பெயர் என்பதனை விரைவில் உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். 

66

எங்களுடைய குட்டி தேவதை வீட்டிற்கு வருகை தந்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். இந்த தருணத்தில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனது மகளைப் பற்றி மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மனமுவந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராம் சரண்
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Recommended image2
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image3
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved