அஜித் - ஷாலினி முதல் கௌதம் - மஞ்சிமா வரை ரீல் ஜோடியாக நடித்து.. ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள்!
சில பிரபலங்கள் ரீல் ஜோடிகளாக நடித்து, பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாக மாறி விடுகிறார்கள். அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட 10 பிரபலங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
சூர்யா - ஜோதிகா:
சூர்யாவும் ஜோதிகாவும் 1999 இல் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படப்பிடிப்பில் சந்தித்தனர், ஆனால் இவர்கள் 2001 ஆம் ஆண்டு வரை காதலிக்க வில்லை. அவ்வப்போது ஒரு சில படங்களில் இணைந்து நடித்தபோது, காதல் கிசுகிசுக்கள் வெளியாக துவங்கியது. இவர்கள் இருவரையும் காதலில் ஒன்றிணைத்த திரைப்படம் என்றால் அது 'காக்கா காக்கா' படம் தான். இந்த படத்திற்கு பின்னர் இருவரும் டேட்டிங் செய்ய துவங்கிய நிலையில், 2006ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
அஜித் - ஷாலினி:
குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் கதாநாயகியாக மாறிய ஷாலினியையும், 'காதல் மன்னன்', 'காதல் கோட்டை' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த தல அஜித்தையும் காதலர்களாக மாற்றிய பெருமை 'அமர்க்களம்' படத்தையே சேரும். இந்த படத்தில் நடித்து முடித்த அஜித் - ஷாலினி பெற்றோர் சம்மதத்துடன், 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இது என்ன குஷ்புவுக்கு வந்த சோதனை? மீண்டும் அதே பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?
சினேகா - பிரசன்னா
நடிகை சினேகா, பிரசன்னா ஹீரோவாக நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. சில வருடங்கள் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், பின்னர் பெற்றோரை சமாதானம் செய்து 2012 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
ரகுவரன் - ரோகினி:
நடிகர் ரகுவரனுடன் ரோகிணி காக்கா, ரகுமா, மற்றும் தொட்ட சிணுங்கி என்கிற மூன்று படங்களில் நடித்துள்ளார். தொட்டா சிணுங்கி படத்திற்கு பின்னரே இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றபின்னரும், நட்பு ரீதியாக ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா - சரத்குமார்:
நடிகர் சரத்குமாருடன் பல படங்களில் நடித்துள்ளவர் ராதிகா. இவர் சரத்குமாருடன் ரகசிய போலீஸ், சூரிய வம்சம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் போது இவர்கள் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இது இவர்கள் இருவருக்குமே முதல் திருமணம் இல்லை என்பதால் மிகவும் எளிமையாக 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பாக்யராஜ் - பூர்ணிமா :
இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூர்ணிமா. ஆனால் அப்போது இவர்கள் காதலிக்க துவங்கவில்லை. பாக்யராஜின் முதல் மனைவியான பிரவீனா இறந்த பின்னர், 'விதி' படத்தில் இணைந்து நடிக்கும் போது பூர்ணிமா தன்னுடைய காதலை வெளிப்படுத்திய நிலையில், பின்னர் மனைவி இறந்த ஒரே வருடத்தில் இவரை திருமணம் செய்து கொண்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!
நஸ்ரியா - ஃபகத் பாசில்
மலையாளத்தில் உருவான 'பெங்களுர் டேஸ்' படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது ஃபகத் பாசில் நஸ்ரியாவை சந்தித்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். சில நாட்களுக்கு பின்னர் நஸ்ரியாவும் காதலுக்கு பச்சை கொடி காட்ட, இவர்களின் திருமணநாள் பிரமாண்டமாக நடந்தது.
ஆர்யா - சாயிஷா
ஆர்யா - சாயிஷா ஜோடி 'கஜினிகாந்த்' படத்தில் ஒன்றாக நடிக்கும் போது காதலிக்க துவங்கியதாக சில தகவல்கள் வெளியான போதிலும், இது குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வந்த இந்த ஜோடி, பின்னர் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் டெடி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிமா - கெளதம்
மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்தியுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது, ஏற்பட்ட நட்பிற்கு பின்னர் காதலிக்க துவங்கினர். கடந்த மூன்று வருடங்களாக காதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த போதிலும், கண்டுகொள்ளாமல் டேட்டிங் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.