MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது என்ன குஷ்புவுக்கு வந்த சோதனை? மீண்டும் அதே பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

இது என்ன குஷ்புவுக்கு வந்த சோதனை? மீண்டும் அதே பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

நடிகை குஷ்பு மீண்டும் அதே பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 23 2023, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. முதல் முதலில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது குஷ்புவுக்கு தான். தென்னிந்திய மொழி முன்னணி ஹீரோக்களான,  ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

25

 திருமணத்திற்கு பின்னரும், பல படங்களில் அக்கா, அண்ணி போன்ற அழுத்தமான வேடங்களை தேர்வு செய்து நடித்த குஷ்பு, பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்? நடுரோட்டில் நடந்த ஆதிரை திருமணம்! கீழே விழுந்து கதறிய ஜனனி!

 

35
kushpoo

kushpoo

நடிப்பை தாண்டி அரசியலிலும் கால் பதித்துள்ள குஷ்பு, திமுக, காங்கிரஸ், கட்சிகளை தொடர்ந்து தற்போது பாஜக காட்சியிலும் தேசிய குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அவதூறாகப் பேசியதுடன் குஷ்பு பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசினார் என அவரை கண்டிக்கும் விதத்தில் குஷ்பு பிரஸ் மீட் வைத்து அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

45

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்,  coccyx bone பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே முதுகு தண்டுவடப் பகுதிக்கு கீழ் மிகவும் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அதே பிரச்சனைக்காக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!

55

கையில் ட்ரிப்ஸ் எறியபடி, பெட்டில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பின்னர்  முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த பின்னர் ரசிகர்கள் பலரும், விரைவில் நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குஷ்பூ

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved