- Home
- Cinema
- மன்னத் வீட்டை விட்டு வெளியேறி தமிழ் பட ஹீரோயின் வீட்டில் வாடகைக்கு குடியேறும் ஷாருக்கான்! ஏன்?
மன்னத் வீட்டை விட்டு வெளியேறி தமிழ் பட ஹீரோயின் வீட்டில் வாடகைக்கு குடியேறும் ஷாருக்கான்! ஏன்?
ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னத் வீட்டை விட்டு வெளியேறி மாதம் வாடகை வீட்டில் வசிக்க போவதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மன்னத் வீட்டை விட்டு வெளியேறும் ஷாருக்கான்
ஷாருக்கானும் அவரது குடும்பத்தினரும் தற்காலிகமாக மன்னத் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பாலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. மேலும் ஷாருக்கானின் குடும்பம் பாந்த்ராவின் பாலி ஹில்லில் உள்ள, ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், மாதத்திற்கு ரூ.24 லட்சம் வாடகையில் ஒரு வீட்டில் தங்க உள்ளார்களாம்.
ஷாருக்கானின் மன்னத் வீடு
ஷாருக்கானின் மன்னத் வீடு, மும்பையின் ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது. மும்பைக்கு சுற்றுலா வரும் ரசிகர்கள் பலர், ஒவ்வொரு நாளும், ஷாருக்கானை பார்க்கமுடியவில்லை என்றாலும் அவருடைய வீட்டை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்திற்காக, தற்போது ஷாருக்கான் தனது மனைவி கௌரி கான் மற்றும் அவரது பிள்ளைகளுடன், மன்னத் விட்டு வெளியேறி ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற உள்ளார்.
ஷாருக்கானுக்கு ரூ. 9 கோடி கொடுக்கும் மகாராஷ்டிரா அரசு; காரணம் என்ன?
ன்னத் வீட்டில் வரும் மே மாதத்தில் சில புதுப்பித்தல் பணிகள் தொடங்க உள்ளது.
இதுகுறித்து சமீபத்திய ஊடக அறிக்கையின்படி வெளியாகியுள்ள தகவலில், மன்னத் வீட்டில் வரும் மே மாதத்தில் சில புதுப்பித்தல் பணிகள் தொடங்க உள்ளதாம். வீட்டுக் இருந்து கொண்டே புதுப்பித்தல் பணியை மேற்கொண்டால் அது சில சிரமங்களை கொடுக்கும் என்பதால், தற்போது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜாக்கி பக்னானி சொந்தமானது
மேலும் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் விருப்படி ஷாருக்கான் மாதம் ரூ.24 லட்சத்திற்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த ஆடம்பரமான பங்களா, பூஜா காசா, திரைப்பட தயாரிப்பாளர் வாசு பக்னானியின் பிள்ளைகளான நடிகர் ஜாக்கி பக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோருக்கு சொந்தமானது.
7300 கோடி சொத்துக்கு அதிபதி; 2024-ல் இந்தியாவிலேயே பணக்கார நடிகர் யார் தெரியுமா?
ரகுல் ப்ரீத் சிங் கணவர்
ஜாக்கி பக்னானி, பிரபல தமிழ் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஆவார். ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
3 வருட குத்தகை:
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிடத்தின் முதல், இரண்டாவது, ஏழாவது மற்றும் எட்டாவது தளங்களில் இரண்டு டூப்ளெக்ஸ்கள் அறைகள் உள்ளன. இது கான் குடும்பத்தினரை மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்புக் குழு மற்றும் ஊழியர்களையும் தங்கவும் ஏதுவாக இருக்கும். மூன்று வருட குத்தகை முழுவதும் கான்கள் குடும்பம் இங்கு வசிக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மன்னத் பங்களா புதுப்பித்தல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.