MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த பதான்

கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த பதான்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை இரண்டே வாரத்தில் முறியடித்து பதான் படம் சாதனை படைத்துள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2023, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார். ஜான் ஆபிரஹாம் வில்லனாக மிரட்டியிருந்த இப்படம் உலகளவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ரிலீஸுக்கு முன் இப்படத்திற்கு எதிராக பாய்காட் சர்ச்சையும், வெடித்ததால் அது வசூலை பாதிக்கும் என கூறப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஆனால் ரிலீசுக்கு பின் நிலைமை தலைகீழாக மாறியது. படம் அமோக வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் அள்ளிய இந்திய திரைப்படம் என்கிற சாதனையையும் பதான் படைத்துள்ளது. இப்படம் ரிலீசாகி 2 வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது வரை ரூ.900 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இதையும் படியுங்கள்... விடிவி முதல் பிரேமம் வரை... காதல் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் ஆகவுள்ள ரொமாண்டிக் ஹிட் படங்களின் முழு விவரம் இதோ

34

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு மைல்கல்லை பதான் படம் எட்டியுள்ளது. அதன்படி இந்தியில் அதிக வசூலை ஈட்டிய படம் என்கிற சாதனையை படைத்துள்ளது பதான். இதற்கு முன் யாஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் மொத்தமாக ரூ.435 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது பதான் படம் அதனை முறியடித்துள்ளது.

44

அதன்படி பதான் படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் தற்போது வரை ரூ.436 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஷாருக்கான். பதான் திரைப்படம் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருவதால், விரைவில் ரூ.1000 கோடி கலெக்‌ஷனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சீரியல் ஹீரோயின் உடன் பைக்கில் செம்ம ஸ்பீடாக சென்ற TTF வாசன்... பயத்தில் அலறிய நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved